Automobile Tamilan

10 லட்சம் ஆட்டோமேட்டிக் கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி

maruti fronx

நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி ஒட்டுமொத்தமாக 10 லட்சம் ஆட்டோமேட்டிக் கார் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 4 விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகையில் 16 மாடல்களை தனது விற்பனை வரிசையில் கொண்டுள்ளது.

ஏஜிஎஸ் –  Auto Gear Shift (ஏஎம்டி), 4 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக், 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் இ-சிவிடி என நான்கு விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகைகளில் மாருதி சுசூகி விற்பனை செய்து வருகின்றது.

Maruti Suzuki Automatic Cars

ஒட்டோமொத்த ஆட்டோமேட்டிக் வாகன விற்பனையில் AMT 65 சதவிகிதம்,  27 சதவிகிதம் டார்க் கன்வெர்ட்டர், e-CVT மீதமுள்ள 8 சதவிகிதம் ஆக உள்ளது. மாருதியின் கிராண்ட் விட்டாரா, பலேனோ மற்றும் XL6 போன்ற மாடல்களை விற்பனை செய்யும் மாருதியின் பிரீமியம் நெக்ஸா டீலர்ஷிப்கள் 58 சதவீதமும், , மீதமுள்ள 42 சதவீதம் ஆனது ஆல்டோ கே10, வேகன்ஆர், ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா போன்றவற்றை விற்பனை செய்யும் மாருதி அரினா டீலர்ஷிப் கொண்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கேரளாவில் தானியங்கி மாடல்களுக்கு அதிக தேவை இருப்பதாக மாருதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

Exit mobile version