மாருதி சுசூகி டிசையர் ஸ்பெஷல் எடிஷன் விற்பனைக்கு வெளியானது

பிரசத்தி பெற்ற மாருதி டிசையர் கார் அடிப்படையில் வெளியாகியுள்ள மாருதி சுசூகி டிசையர் ஸ்பெஷல் எடிஷன் மாடல் LXi/LDi வேரியன்டில் அடிப்படையாக கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

1.2 லிட்டர் கே வரிசை பெட்ரோல் எஞ்சின் மாடலின் பவர் 82 ஹெச்பி வெளிப்படுத்துவதுடன் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் பெட்ரோல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் 75 ஹெச்பி பவருடன் , 190 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் மாருதியின் ஏஜிஎஸ் என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

டிசையர் டீசல் கார் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28.40 கிலோமீட்டர் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக டிசையர் மாறியுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசன் மாடலில் முன்பக்க பவர் விண்டோஸ், வீல் கவர், ரியர் பார்க்கிங் சென்சார், ப்ளூடுத் வசதியுடன் கூடிய இரண்டு ஸ்பீக்கர்களை பெற்ற ம்யூசிக் சிஸ்டம் , ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் வசதியை கொண்டுள்ளது.

மாருதி டிசையர் ஸ்பெஷல் எடிசன் – ரூ. 5.56 லட்சம் (பெட்ரோல்)

மாருதி டிசையர் ஸ்பெஷல் எடிசன் – ரூ. 6.56 லட்சம் (டீசல்)

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)