Automobile Tamilan

மாருதி சுசூகியின் முதல் எலெக்ட்ரிக் இ விட்டாரா எஸ்யூவி டீசர் வெளியானது..! – பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025

e vitara teased by maruti suzuki

வரும் ஜனவரி 17ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாரா அறிமுகம் செய்யப்பட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் முதன்முறையாக வெளியாகி 2025 ஆட்டோ எக்ஸ்போ அல்லது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ அரங்கில் இந்திய சந்தைக்கு காட்சிக்கு வரவுள்ளது.

ஏற்கனவே e Vitara மாடல் இத்தாலி நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலும் அதே அடிப்படையிலான வடிவமைப்பு மற்றும் பேட்டரி ஆப்ஷனை பெற்றிருப்பது உறுதியாகி இருக்கின்றது.

Heartect-e பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட மாடலில் FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டார்  உள்ளது.

சர்வதேச அளவில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்று ஆல் வீல் டிரைவ் ஆப்சனையும் பெறுகின்ற இந்த மாடல் இந்திய சந்தைக்கு இதே போன்ற பேட்டரி ஆப்ஷனை பெற்று பல்வேறு நவீனத்துவமான கணக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் உள்ளிட்ட விபரங்களுடன் ரேஞ்ச் தொடர்பான அனைத்து விபரங்களும் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனைக்கு அனேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் டெலிவரி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாடல் மட்டுமல்லாமல் டொயோட்டா நிறுவனமும் அனேகமாக அர்பன் குரூஸர் கான்செப்ட் மாடலையும் அறிமுகம் செய்யும் வாய்ப்புகளும் உள்ளது.

Exit mobile version