
இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரின் முதல் எலக்ட்ரிக் காராக e Vitara விற்பனைக்கு டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதால், போட்டியாளர்களான டாடா, எம்ஜி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மிக கடும் சவாலினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
சர்வதேச அளவில் சில நாடுகளில் விற்பனையை துவங்கியுள்ள சுசூகி இந்தியாவிலும் 2026 ஆம் ஆண்டின் துவக்கத்தில் விநியோகத்தை துவங்க வாய்ப்புள்ளது.
மாருதி சுசூகி e Vitara
குஜராத்தில் உள்ள சுசூகி ஆலையில் தயாரிக்கப்படுகின்ற இ விட்டாரா மாடலை சுசூகி மட்டுமல்லாமல், டொயோட்டாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய HEARTECT-e பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வழங்குகின்றது. சர்வதேச அளவில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் கிடைக்கிறது.
கூர்மையான LED ஹெட்லைட், உயரமான வீல் ஆர்ச்சுகள் மற்றும் பாக்ஸ் ஸ்டைலுடன் இணைந்த மாடர்ன் வடிவமைப்பினை பெற்று கொண்டு இரட்டைத் திரைகளை பெற்று ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
பனோரமிக் சன்ரூஃப் , வெண்டிலேட்டட் சீட்கள், 360-டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உடன் 6 ஏர்பேக்குகள் மற்றும் Level 2 ADAS (Advanced Driver Assistance Systems) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இ விட்டாராவின் விலை அனேகமாக ரூ.17 லட்சம் முதல் துவங்க வாய்ப்புள்ளது.