Automobile Tamilan

ஃபிரான்க்ஸ் அடிப்படையில் டொயோட்டா டைசர் காரின் அறிமுக விபரம்

டொயோட்டா டைசர்

வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி மாருதி சுசூகியின் ஃபிரான்க்ஸ் கிராஸ்ஓவர் ரக மாடலின் அடிப்படையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சந்தையில் அமோக வரவேற்பினை பெற்ற பலேனோ அடிப்படையிலான க்ராஸ்ஓவர் ரக ஃபிரான்க்ஸ் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்று விற்பனைக்கு வந்த 10 மாதங்களுக்குள் 1 லட்சம் இலக்கை கடந்து சாதனை படைத்திருந்தது.

டொயோட்டா டைசர் காரில் இரு விதமான எஞ்சின் பெறுவது உறுதியாகியுள்ளது. அவற்றின் விபரம் பின் வருமாறு;- 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான ஆப்ஷனில் வரக்கூடும்.

டாப் வேரியண்டில் சக்திவாய்ந்த 100 hp பவர், 148 Nm டார்க் உற்பத்தி செய்கின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

பலேனோ காரின் அடிப்படையில் கிளான்ஸா மாடலை டொயோட்டா விற்பனை செய்து வருகின்ற நிலையில், ஃபிரான்க்ஸ் அடிப்படையிலான டைசர் டொயோட்டாவிற்கு கூடுதலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய வாய்ப்பாக இருக்கும்.  இந்த மாடல் பெட்ரோல் பயன்முறை தவிர சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்திய சந்தையில் தொடர்ந்து ஃபார்ச்சூனர், இன்னோவா ஹைக்ராஸ், கிரிஸ்டா என பிரீமியம் மாடல்களின் சந்தையிலும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற சிறப்பான மாடல்களுடன் சுசூகியின் எர்டிகா ரீபேட்ஜ் செய்யப்பட்ட ரூமியன் மற்றும் கிளான்ஸா விற்பனையில் உள்ளது.

வரும் 3 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள டொயோட்டா டைசர் விலை ரூ.8 லட்சத்துக்குள் துவங்க உள்ளதால், ஃபிராண்க்ஸ் உட்பட 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் கியா சொனெட் , ஹூண்டாய் வெனியூ ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ள உள்ளது.

 

Exit mobile version