Automobile Tamilan

மாருதியின் சுசூகி கிராண்ட் விட்டாரா பான்டம் பிளாக் எடிசன்

Grand Vitara Phantom Blaq Edition

மாருதி சுசூகியின் நெக்ஸா டீலர்களின் வெற்றிகரமான 10 ஆண்டுகளை முன்னிட்டு சிறப்பு கிராண்ட் விட்டாரா பான்டம் பிளாக் எடிசனை அறிமுகம் செய்துள்ள நிலையில் விலை விவரங்கள் பற்றி தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

1.3 லிட்டர் மூன்று சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் எஞ்சின் அதிகபட்சமாக  92hp, 122Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் கூடுதலாக உள்ள பேட்டரி இணைந்து ஒட்டுமொத்தமாக  116hp, 141Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ-சிவிடி கியர்பாக்ஸ் பெற்று இந்த எஞ்சின் கொண்ட மாடல் 27.97kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.

கருமை நிற Grand Vitara Phantom Blaq Edition

குறிப்பாக டாப் ஆல்பா+ ஹைபிரிட் (Strong Hybrid Alpha+) வேரியண்டடை அடிப்படையாக கொடுக்கப்பட்டுள்ள பிரேத்தியேகமான மேட் ஃபினீஷ் செய்யப்பட்ட இந்த பான்டம் பிளாக் எடிசனில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டு, முழுமையாக கருமை நிறத்தை பெற்றதாக அமைந்துள்ளது.

மற்றபடி, கிராண்ட் விட்டாராவின் இன்டீரியர் கருமை நிறத்துடன் ஷாம்பியன் கோல்டு நிறத்திலான இன்ஷர்ட்டுகளை பெற்றுள்ள காரில் மற்ற வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. 9 அங்குல ஸ்மார்ட்பிளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு, பிரீமியம் கிளாரியன் சவுண்ட் சிஸ்டத்துடன் கூடுதலாக 360 வியூ கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD). அதே நேரத்தில் வயர்லெஸ் சார்ஜிங் டாக் எளிதான சாதன சார்ஜிங்கை உறுதி செய்கிறது. கூடுதலாக, சுஸுகி கனெக்ட் வசதியும் உள்ளது.

வெறும் 32 மாதங்களில் 300,000 விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது, இந்தியாவில் நடுத்தர அளவிலான SUV பிரிவில் அமோக வரவேற்பினை பெற்று வரும் கிராண்ட் விட்டாராவுக்கு தற்பொழுது ஸ்ட்ராங் ஹைபிரிட், ALLGRIP செலக்ட் மற்றும் S-CNG உள்ளிட்டவை கிடைக்கின்றது.

Exit mobile version