Automobile Tamilan

ரூ.5,000 வரை மாருதியின் ஏஎம்டி (Auto Gear Shift) கியர்பாக்ஸ் மாடல்கள் விலை குறைப்பு

baleno and fronx

மாருதி சுசூகி நிறுவனத்தால் Auto Gear Shift என அழைக்கப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற ஆல்டோ கே10, செலிரியோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர் பலேனோ, இக்னிஸ், மற்றும் ஃபிரான்க்ஸ் மாடல்களின் விலை ரூ.5,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு ஜூன் 1,2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்க ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுக்கு மாற்றாக விலை குறைப்பை மையமாக கொண்டு கிளட்ச் உதவியில்லாமல் மேனுவலாக கியர்களை மாற்றுவதற்கு ஏதுவாக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என மாருதி அழைக்கின்ற இந்த மாடல்கள் 2014 முதல் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

புதிய மூன்று சிலிண்டர் 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற மாருதி ஸ்விஃப்ட் வெளியானதை தொடர்ந்து புதிய டிசையர் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Exit mobile version