மாருதி சுசுகி கார்கள் விலை ரூ. 23,400 வரை குறைந்தது..!

ஜிஎஸ்டிக்கு பிறகு ஆட்டோமொபைல் துறை பெரிய அளவில் விலை மாற்றங்களை பெற்று வரும் நிலையில் மாருதி சுசுகி கார்கள் மற்றும் எஸ்யூவி-கள் விலை ரூ. 2,300 முதல் ரூ. 23,400 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஜிஎஸ்டி விலை விபரம்

நாட்டின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசுகி நிறுவனம் ரூ. 3.80 லட்சம் தொடங்கி ரூ.12.10 லட்சம் வரையிலான விலையில் மொத்தம் 18 கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

சிறிய ரக ஆல்டோ கார்

ஆல்டோ மற்றும் ஆல்டோ கே10 மாடல்களில் மேனுவல், ஏஎம்டி கியர்பாக்ஸ் போன்றவை பெற்ற மாடல்களில் ரூ. 2,300 முதல் அதிகபட்சமாக ரூ. 5400 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

வேகன்ஆர்

வேகன்ஆர் கார் மாடல் விலை ரூ. 5300 முதல் ரூ. 8,400 வரை விலை சரிந்துள்ளது.

செலிரியோ

ஜிஎஸ்டிக்கு பிறகு செலிரியோ கார் மாடல் விலை ரூ. 5900 முதல் ரூ. 8,700 வரை விலை சரிந்துள்ளது.

மாருதியின் ஸ்விஃப்ட்

பிரசத்தி பெற்ற ஸ்விஃப்ட் கார் விலை ரூ. 6700 முதல் ரூ. 10,700 வரை விலை சரிந்துள்ளது.

டிசையர்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மாருதி டிசையர் கார் ரூ. 2300 முதல் ரூ. 4063 வரை விலை ஜிஎஸ்டிக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா

பரபரப்பான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி விலை ரூ. 10,400 முதல் ரூ.14,700 வரை  குறைக்கப்பட்டுள்ளது.

எர்டிகா

எர்டிகா பெட்ரோல் மாடல்கள் விலை ரூ.12,300 முதல் ரூ.21,800 வரை  குறைக்கப்பட்டுள்ளது.

சியாஸ்

சியாஸ் பெட்ரோல் மாடல்கள் விலை ரூ.13,200 முதல் ரூ.23,400 வரை  குறைக்கப்பட்டுள்ளது.

பலேனோ

பலேனோ மற்றும் பலேனோ ஆர்எஸ் போன்ற மாடல்கள் நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ரூ.6,600 முதல் ரூ.13,100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்-க்ராஸ்

நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்படுகின்ற க்ராஸ்ஓவர் ரக மாடலான எஸ்-க்ராஸ் விலை ரூ. 17,700 முதல் ரூ. 21,400 வரை சரிந்துள்ளது.

அறிவிக்கப்படவில்லை

மாருதி இக்னிஸ், இக்கோ, ஜிப்ஸி மற்றும் ஆம்னி போன்ற கார்கள் மற்றும் சியாஸ், எர்டிகா டீசல் போன்றவற்றின் விலையும் அறிவிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக சியாஸ் மற்றும் எர்டிகா டீசல் மாடல்களில் மைல்டு ஹைபிரிட் பெற்றுள்ளதால் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version