மாருதி ஸ்விஃப்ட் காருக்கு ஐ கிரியேட் வசதிகள் அறிமுகம்

முதன்முறையாக மாருதி சுசுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடலுக்கு அறிமுகம் செய்த தனிநபர் ஐ கிரியேட் கஸ்டமைஸ் அம்சங்கள் தற்போது பிரசத்தி பெற்ற மாருதி ஸ்விஃப்ட் காருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் i Create

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வரவுள்ளதை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஸ்விஃப்ட் காரின் இருப்பினை குறைக்கும் வகையில் கூடுதலான அம்சங்களை மாருதி சுசூகி வழங்க தொடங்கியுள்ளது.

i Create கஸ்டமைஸ் வழியாக மாருதி 120 விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை தோற்றம் மற்றும் இன்டிரியரில் வழங்குகின்றது. வாடிக்கையாளர் விரும்பும் வகையிலான கஸ்டைமைஸ் அம்சங்களை ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

காரின் வெளி தோற்ற அமைப்பில் பாடி கிராபிக்ஸ், மேற்கூறை நிறம், ஸ்பாய்லர், பம்பர் நிறங்கள் மற்றும் ஸ்டிக்கரிங் ,அலாய் வீர் உள்ளிட்ட மேலும் பல வசதிகளும், இன்டிரியரில் இருக்கை கவர், டயர் பிரஷெர் மானிட்டரிங், கூல் பாக்ஸ், லோகோ புராஜெக்சன், ஸ்போர்ட்டிவ் பெடல்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகளை பெறலாம்.

2005 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் இந்தியாவின் மிக அதிகமாக விற்பனை செய்யப்படுகின்ற ஹேட்ச்பேக் காராக தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வருகின்றது.

வருகின்ற பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கூடுதல் தனிநபர் கஸ்ட்மைஸ் வசதிகளை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version