Automobile Tamilan

அதிக மைலேஜ் தரும் ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் அறிமுக விபரம்

maruti swift

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஹேச்பேக் ரக மாடலான மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது வந்துள்ள 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் Z12E அடிப்படையாகக் கொண்டு வரவுள்ள இந்த புதிய சிஎன்ஜி மாடல் மிகச் சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக விளங்கலாம்.

Maruti Suzuki Swift S-CNG

மாருதி நிறுவனம் S-CNG என அழைக்கின்ற சிஎன்ஜி மாடல்கள் மிக சிறப்பான வரவேற்பதின் நாடு முழுவதும் பெற்று வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனம் சிஎன்ஜி கார் விற்பனை சந்தையில் முதன்மையாகவும் விளங்கி வருகின்றது. புதிய எஞ்சின் மிகவும் சிறப்பான வகையில் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

ஏனென்றால் தற்பொழுது விற்பனையில் இருக்கின்ற ஸ்விஃப்ட் மாடல் லிட்டருக்கு அதிகபட்சமாக 25.75 கிலோ மீட்டர் வரை ஏஎம்டி மாடலும் மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 24.80 கிலோமீட்டர் வழங்குகின்றது. இதனை விட கூடுதாக இருக்கும் என்பதனால் மைலேஜ் சராசரியாக ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 32 கிலோ மீட்டருக்கு கூடுதலாக வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு முதல் மூன்று வேரியண்டுகள் சி.என்.ஜி வகையில் வெளியாகலாம் எனவே தற்பொழுது உள்ள பெட்ரோல் மாடலை விட கூடுதலாக ரூபாய் 85 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை விலை கூடுதலாக அமைந்திருக்கும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் போட்டியாளரான டாடா மோட்டார்ஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டு இருந்திருப்பதனால் ஏஎம்டி வருமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி பற்றி முழுமையான விபரங்கள் அடுத்த சில நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version