Automobile Tamilan

விக்டோரிஸ் மூலம் மாருதி சுசுகி கொண்டு வந்த நவீன வசதிகள்

மாருதி சுசூகி விக்டோரிஸ்

போட்டியாளர்கள் ADAS எனப்படும் பாதுகாப்பு வசதி உட்பட பல கனெக்ட்டிவிட்டி சார்ந்த அதி நவீன அம்சங்களை வழங்கி வருபவர்களுக்கு கடும் சவாலினை மாருதி சுசுகி விக்டோரிஸ் மூலமாக வலுவான ஹைபிரிட் சார்ந்த மாடலின் மைலேஜ், உறுதியான கட்டுமானம் என பலவற்றை கொண்டு ஒட்டுமொத்தமாக பிரீமியம் வசதிகளை விரும்புவோருக்கு ஏற்றதாக நடுத்தர எஸ்யூவி சந்தையில் புயலை கிளப்ப துவங்கியுள்ளது.

அரினா டீலர்கள் வாயிலாக நாடு முழுதுவதும் உள்ள 3069க்கு மேற்பட்ட டீலர்களிடமும் விக்டோரிஸ் கிடைக்க உள்ளதால்  மிகப்பெரிய பலமாக சர்வீஸ் நெட்வொர்க் அமைந்துள்ளது.

Advanced Driver Assistance System பெற்ற விக்டோரிஸ்

இன்றைக்கு பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் Level-2 ADAS வழங்குவதனால் மாருதி சுசுகி நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளதால் மிகப்பெரிய அளவில்  பாதுகாப்பினை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு காரணங்களை சொல்லி மாருதியை தவிர்ப்பவர்களும் இனி விரும்பி ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக மாருதி சுசூகி விக்டோரிஸின் வாயிலாக ADAS வசதிகள் பெற்ற முதல் மாடலாக வெளியிட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக், அடாப்ட்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலுடன் இணைக்கப்பட்டு வளைவுகளில் வேகத்தை குறைக்கும் அம்சம், லேன் கீப் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் என 10க்கு மேற்பட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளது.

மற்றொன்று, குழந்தைகள், வயது வந்தோர் என இருவர் பாதுகாப்பிலும் BNCAPல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Dolby Atmos உடன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம்

ஹார்மன் தயாரித்துள்ள பிரீமியம் சவுண்ட் வழங்கும் வகையிலான 8 ஸ்பீக்கர்களை பெற்ற Infinity மியூசிக் சிஸ்டத்தின் மூலம் டால்பி அட்மாஸ் 5.1 மூலம் உயர்தரமான இசையை அனுபவிக்கலாம்.

அன்டர்பாடி CNG டேங்க்

மாருதியின் சிஎன்ஜி வாகனங்களில் பொதுவாக கேஸ் டேங் ஆனது பூட் பகுதியில் வழங்கப்படுவதனால் பூட்ஸ்பேஸ் பெறுவதில் சிக்கல் ஏற்படும், அந்த பிரச்சனைக்கு தீர்வாக  கேஸ் டேங்கினை அன்டர்பாடியில் பொருத்தியுள்ளது.

Powered Tailgate, Driver’s Seat with Ventilation

போட்டியாளர்களின் சிறிய ரக கார்களில் கூட வென்டிலேசன் இருக்கைகளை வழங்க துவங்கியுள்ள நிலையில் மாருதி சுசூகி பவர்டூ முறையில் அட்ஜெஸ்ட் செய்யவும் வென்டிலேசனை ஓட்டுநர் இருக்கைக்கு கொடுத்துள்ளது.

விக்டோரிஸில் பின்புறத்தில் உள்ள டெயில்கேட்டினை எலக்ட்ரிக் முறையில் திறக்கு உதவுதுடன் சைகை மூலம் திறக்க உதவி செய்கின்றது.

மாருதி SmartPlay Pro X சிஸ்டம்

தொடுதிரை வசதியுடன் கூடிய 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் சுசூகி நேவிகேஷன் ஆப், அலெக்ஸா இணைப்பு, ஆப் மற்றும் ஓடிடி அனுகல், ஓடிஏ அப்டேட் என பலவற்றை கொண்டுள்ளது.

64 விதமான வண்ணங்களை வெளிப்படுத்தும் ஆம்பியண்ட் லைட்டிங்  இடம்பெற்றுள்ளது.

Exit mobile version