Automobile Tamilan

மாருதி சுசுகியின் விக்டோரிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

மாருதி சுசூகி விக்டோரிஸ் கார்

மாருதி சுசூகியின் நடுத்தர எஸ்யூவி பிரிவில் இரண்டாவது மாடலாக விக்டோரிஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு முதன்முறை வசதிகளை மாருதி வழங்க துவங்கியுள்ளதால் என்னென்ன சிறப்புகளை பெற்றுள்ளது என்பதனை நாம் அறிந்து கொள்ளப் போகின்றோம்.

விக்டோரிஸ் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கி ரூ.18 லட்சத்துக்குள் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது, தற்பொழுது டீலர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்கு ரூ11,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது

இந்தியாவில் ADAS கொண்டு வந்த மாருதி சுசூகி

போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவும், பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக கருதப்படுகின்ற அதிநவீன ஓட்டுநர் உதவி அமைப்பினை முதன்முறையாக இந்திய சந்தையில் விற்பனை செயப்படுகின்ற காரில் விக்டோரிஸ் மூலம் கொண்டு வந்துள்ளது.

ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக், அடாப்ட்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலுடன் இணைக்கப்பட்டு வளைவுகளில் வேகத்தை குறைக்கும் அம்சம், லேன் கீப் அசிஸ்ட், ஹை
பீம் அசிஸ்ட், பின்புறத்தில் வாகனத்தை கவனித்தில் கொண்டு எச்சரிக்கை, லேன் மாற்ற எச்சரிக்கையுடன் கூடிய பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் என 10க்கு மேற்பட்ட லெவல்-2 ADAS பெற்ற ZXI+ டாப் வேரியண்டில் மட்டும் கிடைக்கின்றது.

பாதுகாப்பு சோதனைக்கான BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள நிலையில் அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி என பலவற்றை பெற்று கூடுதலாக மற்ற வேரியண்டுகளில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), முன்பக்க பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய ஆட்டோ 360 வியூ கேமரா ஆக்டிவேஷன், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உடன் ஆட்டோ ஹோல்டு (6AT மட்டும்) பெற்றுள்ளது.

லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் வழங்கும் விக்டோரிஸ்

விக்டோரிஸில் பெட்ரோல், சிஎன்ஜி, மிக வலுவான ஹைபிரிட் என மூன்று ஆப்ஷனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கிடைக்க உள்ளது. கூடுதலாக இதன் எலக்ட்ரிக் வெர்ஷன் இ விட்டாரா என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.

1462cc மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் என்ஜினை பெற்று அதிகபட்சமாக 75.8 kW (103.06 Ps) @ 6000 rpm மற்றும் 139 Nm @ 4300 rpm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் பெற்று 2WD, AWD என இரு டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

குறிப்பாக, AWD மாடலில் ஆட்டோ, ஸ்னோ, ஸ்போர்ட் மற்றும் லாக் டிரைவ் முறைகள் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் கொண்ட மல்டி டெரெய்ன் மோட் செலக்டர் உள்ளது.

இதன் மைலேஜ் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 21.08 கிமீ, 6 வேக ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 21.06 கிமீ மற்றும் ஆல்க்ரீப் AWD வேரியண்ட் லிட்டருக்கு 19.07 கிமீ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி முறையில் கிடைக்கும் மாடல் 74 kW (100.6 Ps) @ 6000 rpm பெட்ரோல் 64.6 kW (87.8 Ps) @ 5500 rpm 68kW (92.45 Ps) @ 5500 rpm சிஎன்ஜி முறை மற்றும் டார்க் 137.1 Nm @ 4300 rpm பெட்ரோல் 122 Nm @ 3800-4800 rpm 121.5 Nm @ 4200 rpm சிஎன்ஜி வெளிப்படுத்தும் 5 வேக மேனுவல் மட்டும் பெற்றுள்ளது.

குறிப்பாக பூட்ஸ்பேசிஸ் சமரசம் செய்யாமல் அன்டர்பாடி பகுதியில் சிஎன்ஜி டேங்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மைலேஜ் 27.02 km/kg உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1490cc வலுவான ஹைபிரிட் பெட்ரோல் என்ஜினை பெற்று அதிகபட்சமாக 68kW (92.45 Ps) @ 5500 rpm மற்றும் 122 Nm @ 3800-4800 rpm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் லித்தியம் ஐயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டு EV முறையில் இயங்கும் வசதியுடன் ECO, Normal,Power டிரைவிங் மோடு பெற்று e-CVT ஆப்ஷனில் மட்டும் கிடைக்கின்றது.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் நடுத்தர எஸ்யூவி மாடலாக விக்டோரிஸ் 28.65 km/l வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி விக்டோரிஸ் டிசைன் மற்றும் வசதிகள்

விக்டோரிஸ் காரின் நீளம் 4360 மிமீ, அகலம், 1795 மிமீ மற்றும் உயரம் 1655மிமீ பெற்று 2600 மிமீ வீல்பேஸ் கொண்டு 215/60 R17 அங்குல ஏரோ ஸ்டைல் வீல் பெற்று எல்இடி புராஜெக்டர் விளக்கு, ரன்னிங் விளக்கு என அனைத்தும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றுடன் ஏரோ வென்ட்ஸ் என பலவற்றை டாப் Zxi / Zxi (O) , Zxi+ / Zxi+ (O) வேரியண்டில்  பெற்றுள்ளது.

பொதுவாக இன்டீரியரில் கருப்பு மற்றும் ஐவரி நிறத்தை கொண்டுள்ள நிலையில், ஸ்டாராங் ஹைபிரிட் மடால்களுக்கு கருப்பு நிறத்துடன் சேம்பியன் கோல்டு இன்ஷர்ட்ஸ் உள்ளது.

பேஸ் Lxi , Vxi போன்றவற்றில் ஹாலஜென் விளக்குடன் 4.2 அங்குல டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது. மற்ற வேரியண்டுகளில் 10.21 அங்குல் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் சுசூகி நேவிகேஷன் ஆப், அலெக்ஸா இணைப்பு, ஆப் மற்றும் ஓடிடி அனுகல், ஓடிஏ அப்டேட் என பலவற்றை கொண்டுள்ளது.

Zxi (O), Zxi+ (O) போன்ற வேரியண்டுகளில் மட்டும் பனரோமிக் சன்ரூஃப் பெற்றதாகவும், மற்ற Zxi, Zxi+ ஆகியவற்றில் 8 வழி அட்ஜெஸ்டபிள் இருக்கை, வென்டிலேட்டேட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், ஏர் கேபின் ஃபில்டர், ஸ்மார்ட் கீ, பவர்டூ டெயில்கேட் என பலவற்றை பெற்றுள்ளது.

மிஸ்டிக் கிரீன், எடர்னல் ப்ளூ, சிஸ்லிங் ரெட், மாக்மா கிரே, ஸ்ப்ளெண்டிட் சில்வர், ஆர்க்டிக் ஒயிட், ப்ளூயிஷ் பிளாக், ப்ளூயிஷ் பிளாக் கூரையுடன் கூடிய எடர்னல் ப்ளூ என 7 ஒற்றை நிறங்களுடன் 3 டூயல் டோன் நிறங்களான ப்ளூயிஷ் பிளாக் கூரையுடன் கூடிய சிஸ்லிங் ரெட் மற்றும் ப்ளூயிஷ் பிளாக் கூரையுடன் கூடிய ஸ்ப்ளெண்டிட் சில்வர் ஆகியவற்றுடன் 10 நிறங்கள் விக்டோரிஸ் கார் பெற்றுள்ளது.

கிராண்ட் விட்டாராவுக்கு சவால் விடுக்கிறதா.?

கிராண்ட் விட்டாரா/அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என இரண்டும் வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரத்தில் வந்துள்ள விக்டோரிஸ் இந்த மாடல்களுக்கும் கடும் சவாலினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரசத்தி பெற்ற க்ரெட்டா, செல்டோஸ், எலிவேட், ஆஸ்டர், ஹெக்டர், கர்வ், பாசால்ட், ஏர்கிராஸ் கூடுதல் விலையில் உள்ள XUV700 என பலவற்றை எதிர்கொள்ளுகின்றது.

விக்டோரிஸ் வாங்கலாமா ?

மாருதி சுசூகியின் மிக சிறப்பான தரம், ஹைபிரிட் மைலேஜ், சிஎன்ஜி பூட்ஸ்பேஸ்,  நம்பகத் தன்மை வளமையான அரினா டீலர் நெட்வொர்க் ஆகியவற்றுடன் கூடுதலாக இந்த முறை பாதுகாப்பு சார்ந்த ADAS, BNCAP 5 நட்சத்திர மதிப்பீடு, 6 ஏர்பேக்குகள் உறுதியான கட்டுமானம் ஆகியவை மிகப்பெரிய பலமாக விக்டோரிஸ்க்கு அமைந்துள்ளது.

ஆனால் கடுமையான போட்டியாளராக க்ரெட்டா உள்ள நிலையில் எவ்வாறு சந்தையை எதிர்கொள்ள போகின்றது என்பது விலை முடிவு செய்யும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 100 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்ய சுசுகி திட்டமிட்டுள்ளதால், டொயோட்டா ரீபேட்ஜிங் விக்டோரிஸ் மாடலும் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வரக்கூடும்.

Maruti Suzuki Victoris image gallery and colours

Exit mobile version