Automobile Tamilan

₹ 5.10 கோடியில் மெகலாரன் அர்துரா விற்பனைக்கு வந்தது

McLaren Artura supercar

இந்தியாவில் மெகலாரன் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரின் அர்துரா ஹைபிரிட் சூப்பர் கார் விற்பனைக்கு ரூ.5.10 கோடி விலையிங் வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் முதல் V6 என்ஜின் பெற்ற மாடலாகும்.

1489 கிலோ எடை கொண்டுள்ள அர்துரா காரினை மெக்லாரன் கார்பன் லைட்வெயிட் ஆர்கிடெக்சர் (McLaren Carbon Lightweight Architecture – MCLA ) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

McLaren Artura

விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மெக்லாரன் Artura PHEV காரில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V6 இன்ஜின் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 585hp உடன் கூடுதலாக 95hp, 225Nm வெளிப்படுத்தும் மின்சார மோட்டாருடன் இணைந்து ஒட்டுமொத்தமாக 680hp பவர் மற்றும் 720Nm டார்க்கினை வழங்குகின்றது. இந்த காரில் ரியர் வீல் டிரைவ் பெற்று 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தை எட்டுவதற்கு  வெறும் 3.0 நொடிகளில் தொட்டு விடும் அதிகபட்ச வேகம் 330km/hr ஆக உள்ளது. இதில் 7.4kWh பேட்டரி, சூப்பர் காருக்கு 31 கிமீ வரை பயணிக்கும் வகையில்130Km/hr வேகத்தையும் வழங்குகிறது.  பேட்டரியை சார்ஜ் செய்ய  2.5 மணி நேரத்தில் 0-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும்.

அர்துரா காரில் இ-மோட், கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ட்ராக் டிரைவ் முறைகளை கொண்டதாக வந்துள்ளது.

மிக ஆடம்பரமான வசதிகளை கொண்ட இன்டிரியரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகிறது.  ஸ்டீயரிங் வீலுடன் இணைந்து நகரும் வகையிலான வசதியுடன் மெகலாரன் Track Telemetry, வாய்ஸ் கட்டுப்பாடு, அவசர அழைப்பு மற்றும் OTA அப்டேட் பெறுகின்றது.

ஹைப்ரிட் செயல்திறன் மிக்க காரில், நுண்ணறிவு சார்ந்த அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-புறப்படும் எச்சரிக்கை, ஆட்டோ ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் சாலையோர அடையாள எச்சரிக்கை உள்ளிட்ட மேம்பட்ட ADAS பெறுகிறது.

இந்திய சந்தையில் மெக்லாரன் அர்துரா கார் விலை ரூ.5.10 கோடி (எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Exit mobile version