இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது

Mercedes G350d

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் G கிளாஸ் வரிசையில் குறைந்த விலை மாடலாக மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d ரூ.1.50 கோடியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி G 63 காரின் விலை ரூ.2.63 கோடியாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய மெர்சிடிஸ் ஜி 350 டி காரில் OM 656 3.0 லிட்டர் இன்-லைன் ஆறு சிலிண்டர் டீசல் என்ஜின் மூலம் அதிகபட்சமாக 210 கிலோவாட் (286 பிஎஸ்) 3,400-4,600 ஆர்.பி.எம் மற்றும் 600 என்எம் டார்க்கை 1,200-3,200 ஆர்.பி.எம்-யில் வெளிப்படுத்துகின்றது. இதில் ஜி டிரானிக் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 40% டிரைவிங் திறனை முன்புற ஆக்சிலுக்கும், மீதமுள்ள 60 % பவரை ரியர் வீலுக்கு வழங்குகின்றது.

0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.4 விநாடிகளை எடுத்த்க் கொள்வதுடன், அதிகபட்ச வேகம் மணிக்கு 199 கிமீ எட்டும் திறனை கொண்டுள்ளது.

மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் காரில் எல்இடி ஹெட்லேம்ப், குரோம்-ஃபினிஷ் லூவ்ர்கள் மற்றும் சில்வர் குரோம் செருகல்களுடன் கூடிய ரேடியேட்டர் கிரில், பின்புற கதவு பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல், எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் 18 அங்குல அலாய் வீல்கள் உள்ளன. 12.3-இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, சாட்டிலைட் நேவிகேஷன் மற்றும் மெர்சிடிஸ் Me கனெக்ட்டேட் வசதிகளுடன் கூடிய 12.3 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (4ஜி ஆதரவு சிம் வழங்கப்பட்டுள்ளது வழியாக). 8 வண்ணங்களில் வந்துள்ள இந்த காரில் 3-மண்டல தானியங்கி ஏசி கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் டச் கண்ட்ரோல் பொத்தான்கள் கொண்ட ஸ்டீயரிங் கொண்டுள்ளது.

Exit mobile version