₹ 2.55 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 400d விற்பனைக்கு அறிமுகமானது

முந்தைய G350d மாடலுக்கு மாற்றாக இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 400d ஆடம்பர ஆஃப்ரோடு எஸ்யூவி ஏஎம்ஜி லைன் மற்றும் அட்வென்ச்சர் எடிஷன் என இரண்டு விதமாக விற்பனைக்கு ரூ.2.55 கோடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

G400d மாடலுக்கான முன்பதிவு கட்டணம் 1.50 லட்சம் ஆக வசூலிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் விநியோகம் துவங்கப்பட உள்ளது.

Mercedes G 400d

தொடர்ந்து மெர்சிடிஸ் G 400d மாடல் பாரம்பரிய லேடர் ஃபிரேம் சேஸ் கட்டுமானத்தால் தயாரிக்கப்பட்டு அதன் ஆஃப்-ரோடு டிரைவிங் ஏற்ற சிறப்பு G-மோட் பெற்றதாக உள்ளது. இதன் 241மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 700மீட்டர் வரை நீர் உள்ள இடங்களில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.

3.0-லிட்டர், OM656, இன்-லைன் ஆறு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 330hp பவர், மற்றும் 700Nm டார்க் வெளிப்படுத்துகின்று. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவர்  நான்கு சக்கரங்களுக்கும் செல்லுகின்றது. G 400d 0-100kph வேகத்தை எட்டுவதற்கு 6.4 வினாடிகள் போதுமானதாகும்.

G 400d AMG மாடலில்  20-இன்ச் மல்டி-ஸ்போக் அலாய் வீல் மற்றும் AMG ஸ்டைலிங் குறிப்புகளைப் பெறுகிறது. இது ஸ்லைடிங் சன்ரூஃப், பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 64 வண்ண ஆம்பியன்ட் விளக்குகள் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

அட்வென்ச்சர் எடிஷன் மாடலில் 18-இன்ச், 5-ஸ்போக் சில்வர் அலாய் வீல், ரூஃப் ரேக் மற்றும் ஸ்பேர் வீல் ஹோல்டர், நீக்கக்கூடிய ஏணி, டெயில்கேட் பொருத்தப்பட்ட முழு அளவிலான டயர் மற்றும் நப்பா லெதருடன் கூடிய மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் வருகிறது.

Share