2026 எம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

mg hector suv

எம்ஜி மோட்டாரின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் 7 இருக்கை என இரண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரூ.11.99 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது டீசல் என்ஜின் விலை அறிவிக்கப்படவில்லை.

MG Hector price list

1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெறுகின்ற ஹெக்டர் 143 hp மற்றும் 250Nm  டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 6-வேக மேனுவல் அல்லது சிவிடி (CVT) கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.  2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வரவுள்ள 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், 170hp மற்றும் 350Nm வெளிப்படுத்தக்கூடும், இது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும்.

Seating Variant 1.5L Turbo Petrol MT 1.5L Turbo Petrol CVT
5-Seater Style Rs. 11,99,000
5-Seater Select Pro Rs. 13,99,000
5-Seater Smart Pro Rs. 14,99,000 Rs. 16,29,000
5-Seater Sharp Pro Rs. 16,79,000 Rs. 18,09,000
5-Seater Savvy Pro Rs. 18,99,000
7-Seater Sharp Pro Rs. 17,29,000 Rs. 18,59,000
7-Seater Savvy Pro Rs. 19,49,000

தேன்கூடு போன்ற வடிவமைப்பினை வெளிப்படுத்தும் ஆரா ஸ்லாட்டுகள் கொடுக்கப்பட்டு, 18-அங்குல அலாய் வீல் மற்றும் பின்பக்க பம்பர் ஆகியவை புதிய வடிவமைப்பைப் பெற்றுள்ளன. ஆனால், முகப்பு விளக்குகள் மற்றும் டெயில் லைட் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

புதிதாக செலடன் ப்ளூ  மற்றும் பேர்ல் ஒயிட் ஆகிய இரண்டு புதிய நிறத்துடன் மேக்னா ரெட், ஸ்டேரி கருப்பு, மற்றும் சில்வர் என 5 நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இன்டீரியரில் 5-சீட்டர் ஹெக்டர் காரில் ‘ஐஸ் க்ரே’ வண்ணத்திலும், ஹெக்டர் ப்ளஸ் மாடல் ‘டான் எனப்படும் பழுப்பு வண்ணத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், 14 அங்குல செங்குத்தான தொடுதிரை கொண்டிருப்பதுடன் எம்ஜி-யின் புதிய ‘ஐஸ்வைப்’ தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டிருப்பதனால், இரு விரல்களைப் பயன்படுத்தி ஏசி அளவையும், மூன்று விரல்களைப் பயன்படுத்தி ஆடியோவையும் கட்டுப்படுத்த முடியும்.

மற்ற வசதிகளில் முன் இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி, ஓட்டுநர் இருக்கைக்கு 6-வழி பவர் அட்ஜஸ்ட்மென்ட் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS பாதுகாப்பு வசதிகள் உள்ளது.

நடுத்தர எஸ்யூவி சந்தையில் உள்ள மாடல்கள், டாடா ஹாரியர், டாடா சியரா, ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா XUV 7XO போன்ற கார்களுக்குப் போட்டியாக கிடைக்கின்றது.

Exit mobile version