இந்தியாவின் மிக விலை குறைந்த எலக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எம்ஜி காமெட் பேட்டரி மின்சார காரின் விலை ₹ 7.98 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கு போட்டியாக மற்றும் 12 லட்சம் விலைக்குள் கிடைக்கின்ற கார்களை ஒப்பீடு செய்து பல்வேறு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
எம்ஜி காமெட் காருக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் டாடா மோட்டார்ஸ் டியாகோ.ev, டிகோர்.ev மற்றும் குறைந்த விலையில் கிடைக்கின்ற எலக்ட்ரிக் எஸ்யூவி சிட்ரோன் eC3 போன்றவை உள்ளது.
சிறிய ஹேட்ச்பேக் கார் போல அமைந்துள்ள காமெட் இவி நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றதாக உள்ளது. குறிப்பாக இந்த காரில் வெறும் இரண்டு கதவுகளை மட்டுமே பெற்று 4 இருக்கைளை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த காரில் எந்தவரு பூட் ஸ்பேஸ் வசதியும் இல்லை.
பரிமாணங்கள் | MG Comet EV | Tata Tiago EV | Tata Tigor EV | Citroen eC3 |
Length | 2,974mm | 3,769mm | 3993mm | 3,981mm |
Width | 1,505mm | 1,677mm | 1677mm | 1,733mm |
Height | 1,640mm | 1,536mm | 1532mm | 1,604mm |
Wheelbase | 2010mm | 2450mm | 2450mm | 2540mm |
Boot Space | — | 240 litres | 316 liters | 315 litres |
இந்த கார்களில் இரண்டு ஹேட்ச்பேக், ஒரு செடான் மற்றும் ஒரு எஸ்யூவி கார் உள்ளது. அனைத்து மாடல்களை விட சிறப்பான இடவசதியை eC3 எஸ்யூவி வழங்குகின்றது.
அதிகப்படியான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துவதில் டிகோர் எலக்ட்ரிக் செடான் முன்னிலை வகிக்கின்றது. குறிப்பாக, எம்ஜி காமெட் இவி காரின் ரேஞ்சுக்கு நேரடியான போட்டியை டியாகோ ஏற்படுத்துகின்றது. போட்டியாளர்களை விட மிக குறைவான ரேஞ்சு மட்டும் காமெட் நிகழ்நேரத்தில் வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது. அதிகப்படியான பயன்பாடு இல்லாத சிட்டி டிரைவிங் மட்டும் குறைந்த தொலைவு மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக கோமெட் எலக்ட்ரிக் அமைந்துள்ளது.
Specifications | MG Comet EV | Tata Tiago EV | Tata Tigor EV | Citroen eC3 | |
Battery | 17.3kWh | 19.2kWh | 24kWh | 26 kWh | 29.2kWh |
Power | 42PS | 61PS | 75PS | 75PS | 57PS |
Torque | 110Nm | 110Nm | 114Nm | 170Nm | 142Nm |
Range | 230km | 250km | 315km | 315km | 320km |
பொதுவாக நான்கு கார்களும் அடிப்படையான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்றது. இதுதவிர, கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை வழங்குகின்றது.
விலையை ஒப்பீடும் பொழுது இந்தியாவின் மிக விலை குறைந்த எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை எம்ஜி காமெட் இவி பெறுகின்றது. டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் ₹ 8.69 லட்சம் முதல் துவங்கி அதிக ரேஞ்சு வெளிப்படுத்தும் பேட்டரி பெற்ற மாடல் ₹ 11.99 லட்சம் வரை கிடைகின்றது. டிகோர் எலக்ட்ரிக் கார் ₹ 12.49 லட்சம் முதல் துவங்கி ₹ 13.75 லட்சம் வரை உள்ளது.
Electric cars | Price |
MG Comet EV | ₹ 7,98,000 |
Tata Tiago.ev | ₹ 8,69,000 – ₹ 11,99,000 |
Tata Tigor.ev | ₹ 12,49,000 – ₹ 13,75,000 |
Citroen eC3 | ₹ 11,50,000 – ₹ 12,76,000 |
(கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலை எக்ஸ்ஷோரூம் இந்தியா )
This post was last modified on April 27, 2023 1:55 AM