எம்ஜி குளோஸ்டெர் பிளாக் ஸ்ட்ரோம் டீசர் வெளியானது

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பரீமியம் எஸ்யூவி குளோஸ்டெர் எஸ்யூவி காரில் பிளாக் ஸ்ட்ரோம் எடிசன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. கருப்பு மற்றும் பல்வேறு இடங்களில் சிவப்பு நிற அக்சென்ட்ஸ் கொண்டிருக்கலாம்.

குளோஸ்டெர் எஸ்யூவி மாடலில் 163 ஹெச்பி பவர் மற்றும் 375 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பெற்றிக்கின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டாப் வேரியண்டுகளில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் பெற்று 218 ஹெச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க் வெளிப்படுத்துகிற 2.0 லிட்டர் ட்வீன் டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இதிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

MG Gloster Black Storm

முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், ORVM மற்றும் கதவு பேனல்கள் போன்ற இடங்களில் சிவப்பு நிறத்தை கொண்டுள்ளது. கருப்பு நிறத்தை முழுமையாக கொண்டுள்ளது. ஹெட்லைட் கிளஸ்டரிலும் சிவப்பு நிற செருகல்களை கொண்டிருக்கும். அது தவிர, முன் ஃபெண்டர்களில் ‘பிளாக் ஸ்ட்ரோம்’ பேட்ஜ் உள்ளது. முன்பக்க கிரில், டெயில்கேட், அலாய் வீல் மற்றும் ஃபாக் லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் பெற்றுள்ளது.

கருப்பு அப்ஹோல்ஸ்டரி மற்றும் டாஷ்போர்டு சென்டர் கன்சோல் பட்டன்கள், சிவப்பு நிற தரை விரிப்பு, சிவப்பு செருகல்கள் மற்றும் சிவப்பு ஆம்பியன்ட் விளக்குகள். கூடுதலாக, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை கேபினின் ஒட்டுமொத்த தோற்றத்துடன் பொருந்தக்கூடிய சிவப்பு நிறத்தை பெற உள்ளது.

Share
Tags: MG Gloster