Automobile Tamilan

இரண்டு எம்ஜி கார்களில் சிறப்பு எடிசன் விற்பனைக்கு வெளியானது

MG hector Snowstorm

ஆஸ்டர் காரில் பிளாக்ஸ்டோர்ம், ஹெக்டரில் ஸ்னோஸ்டோர்ம் என இரண்டு சிறப்பு எடிசன் மாடல்களை பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

JSW MG Hector Snowstorm

ஹெக்டர் காரில் 143 hp பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 173 hp பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு விதமாகவும் கிடைக்கின்றது.

இதில் எம்ஜி ஹெக்டர் ஸ்னோஸ்டோர்ம் எடிசனில் வெளிப்புறத்தில் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்கள் கொடுக்கப்பட்டு முன்புற கிரில், மேற்கூரை, அலாய் வீல், வீல் ஆர்ச், பம்பர், பனி விளக்கு அறை மற்றும் லோகோ போன்றவற்றில் கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது.

இன்டீரியரில் கருப்பு மற்றும் கன் மெட்டல் நிறத்தில் கொடுக்கப்பட்டு Snowstorm பேட்ஜிங் உள்ளது.

JSW MG Astor Blackstrom

அடுத்து, ஆஸ்டர் மாடலில் 110hp பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனை‌ பெற்று மேனுவல் மற்றும் சிவிடி என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.

எம்ஜி ஆஸ்டர் காரில் வெளியிட்டுள்ள பிளாக்ஸ்ட்ரோம் எடிசனில் கருமை நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சில இடங்களில் சிவப்பு நிற தையல்கள் மற்றும் சிவப்பு நிற பிரேக் கேலிப்பர் இடம் பெற்றுள்ளது. இன்டீரியரில் Blackstorm பேட்ஜ் உள்ளது.

(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை )

Exit mobile version