Automobile Tamil

ஜூன் 27 எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

mg hector suv

இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரினை ஜூன் மாதம் 27 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் ஜூன் 4 முதல் இந்தியாவில் முன்பதிவு நடைபெற்று வருகின்ற ஹெக்டருக்கு பெட்ரோல் ஹைபிரிட் வேரியண்ட் அமோகமான ஆதரவினை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் டீசல் காருக்கும் ஆதரவு சிறப்பாகவே உள்ளது.

எம்.ஜி. ஹெக்டர் எஸ்யூவி

முன்பாகவே எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டர் காரில் இடம் பெற உள்ள அனைத்து முக்கிய அம்சங்களையும் வெளியிட்டுள்ளது. எனவே, தற்போது அதிகாரப்பூர்வ விலை அறிவிப்பு மட்டும் வெளியாகுவதனை தொடர்ந்து டெலிவரியை எம்ஜி தொடங்க உள்ளது.

ஹெக்டர் என்ஜின் விபரம்

1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் என இரு விதமான ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. BS4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டதாக வந்துள்ளது.

143hp குதிரைத்திறன் மற்றும் 250Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜினில் மட்டும் 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்க உள்ளது. மைல்ட் ஹைபிரிட் வசதி மூலம் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

எம்ஜி ஹெக்டர் பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ ஆகும்.

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட மாடல்  170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்திருக்கும்.

இந்த எஸ்யூவி ரக மாடலில் வழங்கப்பட்டுள்ள ஐஸ்மார்ட் என்ற அம்சம் பல்வேறு கனெக்கட்டிவிட்ட சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதனால் இந்தியாவின் முதல் இணைய கார் என்ற கவனத்தை பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 5OO, டாடா நிறுவன ஹாரியர், ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்த வல்லதாக ஹெக்டர் விளங்க உள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா செல்டாஸ் எஸ்யூவி மாடலுக்கும் சவாலாகவும் அமைய உள்ளது.

ஜூன் 27 ஆம் தேதி எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடல் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version