Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
எம்ஜி மோட்டார் ஹெக்டர் பிளஸ் விற்பனையை துவங்கியது

எம்ஜி மோட்டார் ஹெக்டர் பிளஸ் விற்பனையை துவங்கியது

mg hector plus launched

ஹெக்டர் மாடலை அடிப்படையாக கொண்ட 6 இருக்கை பெற்ற எம்ஜி ஹெக்டர் பிளஸ் காரின் விலை ரூ.13.48 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.18.53 லட்சம் வரையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகை விலை ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும்.

முன்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஹெக்டர் எஸ்யூவி காரில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற இந்த மாடலில் 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. அடுத்து 1.5 லிட்டர் என்ஜினுடன் வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெறுகின்றது.

2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் பிளஸ் 6 இருக்கை டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

5 இருக்கை கொண்ட எம்ஜி ஹெக்டர் மாடலின் தோற்ற அமைப்பின் பின்புலத்தை பெற்றருந்தாலும் வித்தியாசத்தை வழங்கும் வகையில்,  முன்புற கிரில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு முன்புற பம்பர், எல்இடி ஹெட்லைட் உடன் ரன்னிங் விளக்கில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுள்ளது. பின்புற பம்பர் டெயில் கேட் மற்றும் எல்இடி விளக்குகளில் சிறிய மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரை பொறுத்தவரை சிறிய அளவிலான ஸ்டைலிங் ட்விக்ஸ், 6 இருக்கைகளை பெற்ற ஹெக்டர் பிளசில் (2+2+2) என முறையே இருக்கைகளை பெற்றதாக அமைந்துள்ளது. 10.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், எம்ஜி இண்டர்நெட் இன்சைடு கனெக்ட்டிவிட்டி வசதி மூலமாக 55 விதமான கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற உள்ளது.

ஹெக்டர் பிளஸ் காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, டாப் ஷார்ப் வேரியண்டில் ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் பிரேக் அசிஸ்ட், ஈஎஸ்சி, டிராக்‌ஷன் கட்டுப்பாடு, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், 360 டிகிரி பார்க்கிங் கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

ஹெக்டர் பிளஸ் காரில் ஸ்டாரி ஸ்கை நீலம், கிளேஸ் சிவப்பு, பர்கண்டி சிவப்பு, ஸ்டாரி கருப்பு, கேண்டி வெள்ளை மற்றும் அரோரா சில்வர் என ஆறு வண்ண விருப்பங்களில் வழங்கப்பட உள்ளது.

எம்ஜி ஹெக்டர் பிளஸ் விலை பட்டியல்

முந்தைய ஹெக்டர் 5 இருக்கை மாடலை விட ரூ.80,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ள புதிய ஹெக்டர் பிளஸ் காரின் அறிமுக விலை ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மட்டும். அதன் பிறகு வேரியண்ட் வாரியாக ரூ.50,000 வரை விலை உயர்த்தப்பட்ட உள்ளது.

1.5 டர்போ பெட்ரோல் MT Style – ரூ. 13.48 லட்சம்

1.5 டர்போ பெட்ரோல் DCT Smart – ரூ. 16.64 லட்சம்

1.5 டர்போ பெட்ரோல் Hybrid MT Sharp – ரூ. 17.28 லட்சம்

1.5 டர்போ பெட்ரோல் DCT Sharp –ரூ. 18.20 லட்சம்

2.0 டீசல் MT Style – ரூ. 14.43 லட்சம்

2.0 டீசல் MT Super – ரூ. 15.64 லட்சம்

2.0 டீசல் MT Smart – ரூ. 17.14 லட்சம்

2.0 டீசல் MT Sharp – ரூ. 18.53 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Exit mobile version