எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பற்றி அறிய வேண்டிய 6 முக்கிய தகவல்கள்

எம்ஜி ஹெக்ட்ர்

மோரீஸ் காரேஜஸ் மோட்டார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலாக எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், எம்.ஜி. ஹெக்டர் மாடலில் இடம்பெற உள்ள 6 முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் முதல் இண்டெர்நெட் கார் என்ற பெருமையுடன் வெளியாகியிருக்கின்ற ஹெக்டரில் 4ஜி ஆதரவு சிம் கார்டு உட்பட எதிர்காலத்தில் 5ஜி ஆதரவினை வழங்க உள்ள திறன் பெற்ற இ-சிம் கார்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் கொண்டிருக்கின்றது. பெட்ரோல், ஹைபிரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என மொத்தமாக மூன்று விதமான என்ஜின் வகையில் கிடைக்க உள்ளது.

எம்ஜி ஹெக்டர் காரின் சிறப்புகள்

இந்தியாவில் முன்பாக செயல்பட்டு வந்த செவர்லே நிறுவனத்தின் குஜராத் மாநில அலையை பயன்படுத்தி வரும் எம்ஜி நிறுவனம் இங்காலாந்தை தலைமையிடமாக கொண்டு சீன நிறுவனமான SAIC கீழ் செயல்படுகின்றது. இந்நிறுவனம், ஜிஎம் செவர்லே நிறுவனத்தின் கூட்டணியில் உள்ள நிறுவனமாகும்.

ஸ்டைல்

மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை கொண்டதாக விளங்குகின்ற எம்ஜி ஹெக்டர் மாடலின் தோற்றம் நேர்த்தியான மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் கொண்டு அற்புதமாக விளங்குகின்ற இந்த எஸ்யூவி காரில் 17 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது.

இணைய இன்டிரியர்

10.4 அங்குல அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஓட்டுநருக்கான பல்வேறு தகவல்களை வழங்குகின்றது. பேனராமிக் சன் ரூஃப், 8 வண்ணங்களில் ஜொலிக்கும் மூட் லைட்ஸ் மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் இருக்கை கொண்டதாக உள்ளது.

TomTom’s IQ நேவிகேஷன் சிஸ்டம், Gaana பிரீமியம் மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலி, AccuWeather செயலி உட்பட ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் எனப்படும் அம்சங்களை உள்ளடக்கிய இந்த காரில் “Hello, MG” என்ற வார்த்தையுடன் இயக்கத்தை தொடங்கும் செயற்கை அறிவுத்திறன் மூலம் இயங்கும் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆங்கில மொழி ஆதரவுடன் வழங்கியுள்ளது.

என்ஜின்

143hp குதிரைத்திறன் மற்றும் 250Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்டு 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்க உள்ளது. டர்போ பெட்ரோல் என்ஜினில் மட்டும் 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் வழங்க உள்ளது. மைல்ட் ஹைபிரிட் வசதி மூலம் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

எம்ஜி ஹெக்டர் பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ ஆகும்.

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட மாடல்  170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்திருக்கும்.

எம்ஜியின் ஹெக்டர் எஸ்யூவியின் டீசல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.

MG Hector SUV

பாதுகாப்பு வசதிகள்

அவசரகால E-Call சேவை எனப்படுவது 24/7 முறையில் செயல்படும் பல்ஸ் ஹப் சேவை, காரை சுற்றி 360 டிகிரி கோணத்தில் படம் பிடித்து காண்பிக்கும் வகையிலான கேமரா,காரின் இருப்பிடத்தை அறிவது, காரினை குறிப்பிட்ட எல்லையைக் கடந்தால் எச்சரிக்கும் அமைப்பு, வேக எச்சரிக்கை போன்றவற்றுடன் சர்வீஸ் தகவல்களை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி 5OO, டாடா ஹாரியர், மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு மிகுந்த போட்டியை ஏற்படுத்த வல்லதாக ஹெக்டர் கார் விளங்க உள்ளது. புதிதாக விற்பனைக்கு வரவுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கும் சவாலாகவும் அமைய உள்ளது.

 

எம்ஜி ஹெக்டர் விலை

இன்று பகல் 11.30 மணிக்கு விலை விபரத்தை எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட உள்ளது. ஹெக்டர் எஸ்யூவி விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version