₹ 8.64 லட்சத்தில் எம்ஜி காமெட் EV கேமர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

comet-gamer-edition

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் சிறிய ரக காமெட் எலக்ட்ரிக் காரில் கூடுதல் கிராபிக்ஸ் மற்றும் கேமிங் சார்ந்த தோற்ற உந்துதலை பெற்ற கேமர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடங்களில் பிரபலமாக உள்ள கேமர் மோர்டல் என அழைக்கப்படுகின்ற நமான் மாத்தூருடன் இணைந்து எம்ஜி மோட்டார் இந்தியா வெளியிட்டுள்ள காரின் விலை விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.64,999 கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

MG Comet EV Gamer Edition

கேமர் எடிசன் காமெட் EV காரின் வெளிப்புறமானது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, பின்னர் டார்க் குரோம் மற்றும் ஒளிரும் உலோகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதைத் தவிர, நியான் அசென்ட்ஸ் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன,

இன்டிரியரில் ஒளிரும் வகையிலான நியான் அசென்ட்ஸ், தனிப்பயனாக்கப்பட்ட கேமிங் ஸ்டீயரிங் வீலையும் கொண்டுள்ளது. இவை அனைத்தும் விளையாட்டு ஆர்வலர்களை ஈர்க்கும் முயற்சியில் செய்யப்பட்டுள்ளன.

மற்றபடி, வேறு எந்த மாற்றங்களும் இல்லாமல்  பவர் 42 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 17.3 kWh பேட்டரி பேக் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3.3 kW சார்ஜர் வாயிலாக 10 முதல் 80% சார்ஜ் பெற 5 மணிநேரமும், 0 முதல் 100% சார்ஜ் பெற 7 மணிநேரமும்  தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 230 கிமீ தொலைவு பயணிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

எம்ஜி காமெட் EV விலை ₹ 7.98 லட்சம் முதல் ₹ 9.98 லட்சம் வரை கிடைக்கும் நிலையில், கூடுதலாக கேமிங் எடிசன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.64,999 செலுத்த வேண்டியிருக்கும்.