இந்தியாவில் சோதனை செய்யப்பட்டது எம்ஜி மோட்டார்ஸ் எஸ்யூவி

சீனாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியா மார்க்கெட்டில் தனது எஸ்யூவிகளை அறிமுகம் செய்ய முடிவு செய்து, தனது புதிய எஸ்யூவி கார்களை குஜராத் சாலைகளில் சமீபத்தில் சோதனை செய்துள்ளது.

சோதனை செய்யப்பட்ட புதிய கார்கள், ஐந்து சீட்கொண்ட மாடலாக இருக்கும். ஏற்கனவே இந்த கார் குறித்த ஸ்பை புகைபடங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் மூலம் எம்ஜி மோட்டார் நிறுவனம், ஹூண்டாய் டஸ்கன் கார்களுக்கு போட்டியாக புதிய எஸ்யூவி ஒன்றை உருவாக்குவதேயே காட்டுகிறது.

இந்த கார்களில் லெதர் சீட்கள், டச்ஸ்கீரின் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் ம்வுண்டட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் சீட்கள், பார்க்கிங் பிரேக் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது. துவக்கத்தில் இந்த கார்கள் 5 சீட் வகையாகவும் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏழு அல்லது எட்டு சீட் கொண்ட வகையாக மாற்றிடவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த எஸ்யூவி-க்கள், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அல்லது 2.0 லிட்டர் டீசல் யூனிட்கள் என இரண்டு இன்ஜின் ஆப்சன்களுடன் வெளியாக உள்ளது., இந்த இன்ஜினின் ஆற்றல் குறித்த விப்ரங்கள் இன்னும் வெளியாகமாலேயே உள்ளன. இந்த எஸ்யூவி-க்கள் அறிமுகம் செய்யப்பட்டால், ஹூண்டாய் டஸ்கன் மற்றும் ஜீப் காம்பஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.