Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
340 கிமீ பயணிக்கும் திறனுடன் எம்ஜி ZS EV விற்பனைக்கு வெளியானது

340 கிமீ பயணிக்கும் திறனுடன் எம்ஜி ZS EV விற்பனைக்கு வெளியானது

mg zs ev

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் எம்ஜி மோட்டாரின் அடுத்த காராக இசட்எஸ் இ.வி (MG ZS EV) விற்பனைக்கு ரூ.20.88 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காருக்கான முன்பதிவு துவங்கிய 27 நாட்களில் 2800 முன்பதிவுகளை பெற்றிருந்த நிலையில் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக இந்த கார் இந்தியாவில் விற்பனையில் உள்ள கோனா எலக்ட்ரிக் காரை எதிர்கொள்ள உள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக ஹெக்டர் எஸ்யூவி காரை வெளியிட்ட நிலையில் அடுத்த  காராக இசட்எஸ் விளங்குகின்றது.

44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், அதிகபட்சமாக 340 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 8.5 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு இணை விருப்பமாக 7.4 கிலோ வாட் சார்ஜர் வழங்குவதுடன் 15 ஆம்பியர் வீட்டு சார்ஜரலிலும் சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரியை 7 kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

எம்ஜி ஐஸ்மார்ட் 2.0 நுட்பத்தையும் இசட்எஸ் எலெக்ட்ரிக் பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு இணையம் சார்ந்த வசதிகளை ZS EV  காரில் பெற இயலும். இந்த காரில் வை-ஃபை, டாம்டாம் மேப் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

இசட்எஸ் இவி காருக்கு இஷீல்ட் என அழைக்கப்படும் ஒரு சிறப்பு முயற்சியை அறிவித்துள்ளது. தொகுப்பின் ஒரு பகுதியாக, ZS EV உரிமையாளர்களுக்கு வாகனத்தில் 5 ஆண்டு / வரம்பற்ற கிமீ உற்பத்தியாளர் உத்தரவாதமும், லித்தியம் அயன் பேட்டரியில் 8 ஆண்டு / 1,50,000 கிமீ உத்தரவாதமும் இலவசமாக வழங்கப்படும். இஷீல்ட் 5 வருட காலத்திற்கு 24×7 சாலையோர உதவிகளையும் (ஆர்எஸ்ஏ) உள்ளடக்கியது. தனி நபர் பயன்பாட்டுக்கு வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ZS EV எக்ஸ்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரு விதமான வேரியண்டை பெறுகின்ற இந்த மாடலில் ஸ்கை ரூஃப், பிரீமியம் லெதர் இருக்கைகள்,ஏர் ப்யூரிஃபையர் போன்றவை பெற்றுள்ளது.

ZS EV எக்ஸ்சைட் – ரூ.19,88,000

ZS EV எக்ஸ்குளூசிவ் – ரூ. 22,58,000

அறிவிக்கப்பட்டுள்ள விலை முதலில் வெளியாகின்ற 5 நகரங்களுக்கு மட்டும் பொருந்தும். அதாவது ஜனவரி 17க்கு முன்பாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே.

இனி வாங்குபவர்களுக்கான விலை பட்டியல்

ZS EV எக்ஸ்சைட் – ரூ.20,88,000

ZS EV எக்ஸ்குளூசிவ் – ரூ. 23,58,000

பெங்களூரு, மும்பை, டெல்லி மற்றும் ஹைத்திராபாத் நகரங்களில் கிடைக்க துவங்கியுள்ள இந்த மாடல் அடுத்த 6 மாதங்களில் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Exit mobile version