Automobile Tamilan

340 கிமீ ரேஞ்சு.., இந்தியாவில் எம்ஜி ZS EV எஸ்யூவி அறிமுகமானது

எம்ஜி ZS EV

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள 340 கிமீ ரேஞ்சு கொண்ட எம்ஜி ZS EV எஸ்யூவி காரின் விலை ஜனவரி 2020-ல் வெளியாக உள்ளது. 50 கிலோ வாட் ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு சார்ஜ் ஏற்றினால்  வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் பேட்டரி நிரம்பிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் சோதனை செய்யப்பட்டுள்ள இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் பாஸ் நிறுவனத்தின் துனை நிறுவனமான UAES எலெக்ட்ரிக் மோட்டார் இடம்பெற்றுள்ளது.

எம்ஜி ZS EV மாடலில் பொருத்தப்பட்டுள்ள 44.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்குடன் கூடிய மின்சார மோட்டார் அதிகபட்சமாக 143 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 350 என்எம் டார்க் வழங்குவதுடன், அதிகபட்சமாக 340 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்கும். 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 8.5 விநாடிகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு இணை விருப்பமாக 7.4 கிலோ வாட் சார்ஜர் வழங்குவதுடன் 15 ஆம்பியர் வீட்டு சார்ஜரலிலும் சார்ஜ் செய்யலாம். இந்த பேட்டரியை 7 kW AC சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும் போது அதிகபட்சமாக 7 மணி நேரமும், 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 80 சதவீத சார்ஜிங்கை வெறும் 40 நிமிடங்களில் மேற்கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

எம்ஜி ஐஸ்மார்ட் 2.0 நுட்பத்தையும் இசட்எஸ் எலெக்ட்ரிக் பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு இணையம் சார்ந்த வசதிகளை ZS EV  காரில் பெற இயலும். இந்த காரில் வை-ஃபை, டாம்டாம் மேப் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் முறைகள்

5 விதமான முறையில் இசட்எஸ் காரின் பேட்டரியை சார்ஜிங் செய்ய இயலும். ஆன் போர்டு சார்ஜிங் கேபிள், இல்லம் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள சாதாரன பிளக், நீட்டிக்கப்பட்ட சார்ஜிங் மையங்கள், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் மற்றும் சாலையோர உதவி வழியாக வாகனம் இருக்குமிடத்தில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட உள்ளது.

எம்ஜி ZS EV காரின் விலை ரூ.23 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதம் இந்த காரின் விலை அறிவிக்கப்பட உள்ளது.

ZS EV ஆரம்பத்தில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய ஐந்து நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். MG ZS EV காரின் உற்பத்தி இந்த மாத இறுதியில் குஜராத்தில் உள்ள பிராண்டின் ஹலால் ஆலையில் தொடங்க உள்ளது.

Exit mobile version