Automobile Tamilan

2023 புதிய டாடா நெக்ஸான்.ev அறிமுக தேதி வெளியானது

டாடா மோட்டார்சின் புதிய நெக்ஸான் IC என்ஜின் மாடலை தொடர்ந்து நெக்ஸான்.ev எஸ்யூவி மாடல் செப்டம்பர் 9, 2023 அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய நெக்ஸானை போலவே டிசைன் மாற்றங்களை கொண்டதாக வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நெக்ஸான் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட கர்வ் கான்செப்ட் அடிப்படையில் டிசைன் அம்சங்களை கொண்டதாக வந்திருக்கின்றது.

2023 Tata Nexon.ev

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு என பிரத்தியேகமாக Tata.ev என்ற லோகோவை அறிமுகம் செய்துள்ளது. தனது எலக்ட்ரிக் கார்களில் இனி பெயருக்கு பின்னால் .ev என இணைக்கப்பட்டிருக்கும்.

முன்பாக விற்பனையில் உள்ள மாடலின் பேட்டரி மற்றும ரேஞ்சு என எந்த மாற்றமும் இல்லாமல் புதிய நெக்ஸான்.இவி மாடலில் LR (Long Range) வேரியண்டுகளில் காரின் பவர் 141bhp மற்றும் 250Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 453 கிமீ பயணிக்கலாம்.

இதில் உள்ள 3.3kW சார்ஜர் பயன்படுத்தி, 15 மணிநேரத்தில் பேட்டரியை 10-100 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். அடுத்து  7.2kW சார்ஜர், 0-100 சதவிகிதம் சார்ஜ் செய்ய 6.5 மணிநேரம் ஆகும். நெக்ஸான் EV Max டார்க் ஆனது 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் திறன் கொண்டது. இதில் 56 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் பேட்டரியை நிரப்புகிறது.

Medium Range (MR) வேரியண்டில் 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாடலை அதிகபட்சமாக 80 சதவீத சார்ஜிங் பெற டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வாயிலாக ஒரு மணி நேரத்திலும், சாதாரன ஏசி சார்ஜரில் 7-8 மணி நேரம் 80 சதவீத சார்ஜ் செய்ய இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி டாடா நெக்ஸான் ICE மாடல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அதே நாளில் டாடா நெக்ஸான்.இவி விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version