Car News

2024 ஹூண்டாய் சாண்டா ஃபீ எஸ்யூவி அறிமுகமானது

santa fe suv 2024

வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள ஐந்தாம் தலைமுறை ஹூண்டாய் சாண்டா ஃபீ எஸ்யூவி முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பாக்ஸ் வடிவமைப்பினை கொண்டுள்ளது. மிக நேர்த்தியான புதிய டிசைன் வடிவமைப்பினை கொண்டுள்ள எஸ்யூவி மாடலின் என்ஜின் விபரம் வெளியிடப்படவில்லை.

2.5T பேட்ஜ் இடம்பெற்றிருப்பதனால் டர்போசார்ஜ்டு 2.5 லிட்டர் பெட்ரோல் 281 ஹெச்பி பவருடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2024 Hyundai Santa FE

21 அங்குல அலாய் வீல் பெற்று முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற சாண்டா ஃபீ எஸ்யூவி காரில் பாக்ஸ் வடிவமைப்பு கொண்டு, H-வடிவத்தை வெளிப்படுத்துகின்ற ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் பகல்நேர விளக்குகள் பெற்று அகலமான முன் பம்பரில் உள்ள கிரில் மற்றும் ஏர் டேம் போன்றவை உள்ளது.

எல்இடி டெயில் லைட் ஆனது H வடிவத்திலும் இடம்பெற்று, பக்கவாட்டிலும் மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டதாக அமைந்துள்ளது. C மற்றும் D பில்லரில் பாடி நிறத்தில் பெற்று மேற் கூறை ஆனது பின்புறத்தில் சரிவாக இருக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

2 மற்றும் 3 வது வரிசை இருக்கையை பெற்றுள்ள சாண்டா ஃபீ காரில் இரண்டு 12.3-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்கிரீன் இணைக்கும் பனோரமிக் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட பிரீமியம் தோற்றத்தை கொண்ட டேஷ்போர்டு பெற்றுள்ளது.

இந்தியாவில் சாண்டா ஃபீ  முன்பாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

Hyundai Santa Fe image Gallery

Share
Published by
MR.Durai