Automobile Tamilan

புதிய 2024 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் முன்பதிவு துவங்கியது

புதுப்பிக்கப்பட்ட டிசைன் மற்றும் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட புதிய 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு மே மாதம் 9ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு கட்டணமாக ரூபாய் 11,000 வசூலிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாருதி டீலர்கள் மற்றும் ஆன்லைன் வழியாக இந்த முன்பதிவானது நடைபெற்று வருகின்றது.

suzuki swift cool yellow rev rear

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் கிடைத்த வருகின்ற ஸ்விஃப்ட் மிகச் சிறப்பான மாடலாக இந்திய சந்தையில் கிடைத்து வருகின்றது. அதிகப்படியான வரவேற்பினை பெற்று தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான ஹேட்ச்பேக் ரக மாடலாக விளங்கி வருகின்றது.

புதுப்பிக்க மாடல் இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் கிராஸ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு தரத்தினை பெற்று இருக்கும் என்பதனால், மிக உறுதியான கட்டுமானத்தை கொண்டிருக்கும்.

மாருதியின் ஸ்விஃப்ட் காரில் புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 82 bhp மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம்.

Exit mobile version