Automobile Tamilan

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

new 2026 tata punch facelift launch soon

இந்தியாவின் B-பிரிவில் பிரபலமாக உள்ள டாடா நிறுவன பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் தொடர் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அறிமுகத்திற்கு முன்னர் தற்பொழுது வரை கிடைத்த தகவல்கள், என்னென்ன வசதிகள் பெறலாம் எப்பொழுது விற்பனைக்கு வரலாம் என விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மாருதியின் முதலிடத்திற்கு கடும் சவாலினை ஏற்படுத்திய பஞ்ச் விற்பனை சற்று சில மாதங்களாகவே சரிந்தே காணப்படுகின்றது. குறிப்பாக வலுவான GNCAP 5 ஸ்டார் ரேட்டிங் பஞ்ச் பெற்றிருந்தாலும் இன்னும் 6 ஏர்பேக்குகளை மேம்படுத்தாமல் உள்ளது. போட்டியாளரான எக்ஸ்டர், உட்பட மற்ற கார்கள் பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

2026 Tata Punch  டிசைன் மாற்றங்கள்

சமீபத்தில் கிடைக்கின்ற பஞ்ச்.EV மற்றும் கர்வ் போன்றவறில் இருந்து பெறப்பட்ட புதிய பம்பர், கிரில் என பலவற்றில் மாறுதல்கள் பெற்று புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் கிரில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாறுதல் பெற்று எல்இடி ரன்னிங் விளக்கு என மேம்பட்டதாக அமைந்திருக்கலாம், பக்கவாட்டில் புதிய 16 அங்குல வீல் மாற்றப்பட்டு டிசைனில் வேறுபட்டதாகவும், பின்புறத்தில் உள்ள பம்பர் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் நெக்ஸான் மாடலில் இருந்து பெறப்பட்டு வேறுபட்ட டிசைனை பெறக்கூடும்.

2026 Punch இன்டீரியர் வசதிகள்

இன்டீரியரில் மிக முக்கியமாக அல்ட்ரோஸ் காரில் உள்ளதை போன்ற 10.25 அங்குல ஃபுளோட்டிங் முறையிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று நேர்த்தியான டேஸ்போர்டின் மாற்றங்கள் செய்யப்பட்டு, ஸ்டீயரிங் வீல் மற்ற புதிய டாடா கார்களை போல் இரட்டை ஸ்போக் வீலுடன், ஒளிரும் வகையிலான டாடா லோகோ பெறக்கூடும்.

முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் HVAC பொத்தான்கள் தொடுதிரையில் வழங்கப்பட்டு, அப்ஹோல்ஸ்ட்ரி நிறங்கள் என பல மாறுதல்களை கொண்டிருக்கலாம்.

என்ஜின் ஆப்ஷனில் பஞ்ச் எந்த மாற்றம் இல்லை

பஞ்ச் காரிலுள்ள தற்பொழுதைய 1.2 லிட்டர் பெட்ரோல் மூன்று சிலிண்டர் என்ஜின் பவர் மற்றும் டார்க் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்கப்படலாம்.  1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 3 சிலிண்டர் கொண்ட மாடல் அதிகபட்சமாக 86 hp பவர் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷனில் 74PS பவர் வெளிப்படுத்துகின்றது, சிஎன்ஜியில் மேனுவல் தவிர ஏஎம்டி ஆப்ஷனை பெறக்கூடும்.

அறிமுகம் எப்பொழுது , புதிய Punch விலை எதிர்பார்ப்புகள்

இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்ச் அறிமுகம் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப விலை ரூ.6 லட்சத்தில் துவங்கலாம்.

தற்பொழுதுள்ள மாடலில் உள்ள லேசான என்ஜின் அதிர்வுகள், கேபின் சத்தம் குறைக்கப்பட வேண்டும், பின்புற இருக்கைகளுக்கு ஏசி வென்ட், யூஎஸ்பி போர்ட் போன்றவற்றுடன், என்ஜின் சார்ந்த பெர்ஃபாமென்ஸ் நெடுஞ்சாலை பயணத்துக்கு மேம்படுத்தப்பட்டதாக 2026 பஞ்ச் வந்தால் தொடர்ந்து இந்த சந்தையில் வலுவான மாடலாக விளங்கும்.

5 நட்சத்திர மதிப்பீட்டை ஏற்கனவே பெற்றுள்ள பஞ்ச் கூடுதலாக 6 ஏர்பேக்குகளை கொடுக்கப்பட வேண்டும்.

Exit mobile version