Automobile Tamilan

புதிய சிட்ரோயன் ஏர்கிராஸ் X முன்பதிவு துவங்கியது

Citroen Aircross x teased

சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய வசதிகளை வழங்கும் 2.0 திட்டத்தின் படி ஏர்கிராஸ் எக்ஸ் மாடல் விற்பனைக்கு வெளியிடப்படுவதனை உறுதி செய்யும் வகையில் டீசர் வெளிடப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படும் நிலையில் விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படலாம்.

முன்பாக வெளியான பாசாலட் எக்ஸ் மற்றும் C3 X போன்று இந்த மாடலிலும் மேம்பட்ட வசதிகளில் குறிப்பாக, க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் ஸ்பீடு லிமிடெட்டர், வென்டிலேட்டேட் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் , ஏபிஎஸ் உடன் இபிடி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், TPMS, ஹாலோ 360-டிகிரி கேமரா, எஞ்சின் இம்மொபைலைசர், வேக உணர்ந்து செயல்படும் ஆட்டோ டோர் லாக்குகள், அதிவேக எச்சரிக்கை அமைப்பு & பெரிமெட்ரிக் அலாரம் போன்றவை பெற உள்ளது.

மற்றபடி, என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஏர்கிராஸில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மட்டும் பெற்றிருந்த நிலையில் தற்போது 82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.

110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

Exit mobile version