Automobile Tamilan

₹6.49 லட்சத்தில் 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு அறிமுகமானது

maruti swift

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 2024 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் ஆரம்ப விலை ₹ 6.49 லட்சம் முதல் ₹ 9.64 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 1.2 லிட்டர் K12B 4 சிலிண்டருக்கு பதிலாக 3 சிலிண்டர் Z12E 1.2 லிட்டர் என்ஜின் பெற்றிருக்கின்றது.

கடந்த மே 1 ஆம் தேதி முதல் புதிய ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்பட்டு வருகின்றது. மேலும் நாடு முழுவது உள்ள மாருதி அரேனா டீலர்களுக்கு புதிய மாடல் வந்துள்ளதை தொடர்ந்து உடனடியாக டெலிவரி வழங்கப்பபட உள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் டிசைன்

முந்தைய தலைமுறை மாடலை விட மேம்பட்ட டிசைன அம்சங்களை கொண்டுள்ள இந்த மாடலுக்கானது முன்புறத்தில் எல்இடி புராஜெக்டர் விளக்குகள் கொடுக்கப்பட்டு பம்பர் கிரில் ஆனது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி பானெட் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக இரண்டு நிறங்கள்  நீலம் மற்றும் ஆரஞ்ச் சேர்க்கப்பட்டு சிவப்பு, சில்வர், கிரே, வெள்ளை என 6 ஒற்றை வண்ண நிறங்கள், கூடுதலாக கருப்பு நிற மேற்கூறையுடன் வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று டூயல் டோன் என மொத்தமாக 9 நிறங்களை பெற்றுள்ளது.

பக்கவாட்டில் 15 அங்குல டைமனட் கட் அலாய் வீல் பெற்று நேர்த்தியான மிதக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சி பில்லர் பகுதியில் கருப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

டாப் வேரியண்டுகளில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் கொண்டு பம்பரில் சிறிய மாற்றங்கள் பின்புறத்தில் தரப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் இன்டிரியர் வசதிகள்

புதிய 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலின் டாப் வேரியண்டில்  9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று சுசூகி கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹெட்அப் டிஸ்பிளே மூலம் வேகம் , டர்ன் பை டர்ன் நேவிகேஷன் பெற உள்ளது. நடுத்தர VXi, VXi (O) வேரியண்டுகளில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது இடம்பெற்றுள்ளது.

5 நபர்கள் அமரும் வகையிலான இருக்கையை பெற்று

ஸ்விஃப்ட் வேரியண்ட் விபரம்

2024 மாடலில் LXi, VXi, VXi (O), ZXi, மற்றும் ZXi+ என 5 விதமான வேரியண்ட்டை பெற்றுள்ளது. இவற்றில் ஆரம்ப நிலை LXi மட்டுமே மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாகவும், மற்ற வகைகள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

பொதுவாக அனைத்து வேரியண்டுகளிலும்  6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் இடம்பெற்றிருக்கின்றது.

ஸ்விஃப்ட் என்ஜின் விபரம்

புதிய 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

2024 Maruti Suzuki Swift Price list

(All Price Ex-showroom)

 

Exit mobile version