ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், புதிய காம்பேக்ட் எஸ்யூவி எலிவேட் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ.21,000 ஆக வசூலிக்கப்பட்டு ஜூலை 3 ஆம் தேதி முதல் துவங்குவதனால், விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படலாம்.
எலிவேட் காருக்கான 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.
ADAS அடிப்படையிலான டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்ட ஹோண்டா சென்சிங் (Honda Sensing) அம்சத்தில் முன்னே செல்லும் வாகனத்தின் சாலையை ஸ்கேன் செய்வதற்கும், விபத்துகளின் ஆபத்தை குறைப்பதற்கும், டிரைவரை எச்சரிப்பதற்கும் கண்டறிதல் அமைப்புடன் கூடிய உயர்-செயல்திறன் கொண்ட முன்பக்கக் கேமராவை கொண்டுள்ளது.
மோதலின் தீவிரத்தை தவிர்க்க அல்லது குறைக்க தலையிடவும். மோதல் தணிப்பு பிரேக்கிங் சிஸ்டம் (CMBS), அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரோடு டிபார்ச்சர் மிட்டிகேஷன் (RDM), லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம் (LKAS) மற்றும் ஆட்டோ ஹை-பீம் ஆகியவற்றை பெற்றுள்ளது.
ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் விலை ரூ.11 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக கடுமையான போட்டியாளர்கள் நிறைந்த சந்தையில் ஹோண்டா நிறுவனம் சந்தையை எவ்வாறு எதிர்கொள்ளும் என காத்திருந்து அறிந்து கொள்ளலாம்.