இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் வெளியிட்டுள்ள புதிய எலிவேட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக கடும் போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது.
எலிவேட் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதியான கட்டுமானத்தை பெற்று, பாதசாரிகள் பாதுகாப்பு, மல்டி ஆங்கிள் ரியர் கேமரா, அவசரகால ஸ்டாப் சிக்னல், ISOFIX இணக்கமான பின் பக்க இருக்கைகள் மற்றும் லோயர் ஏங்கரேஜ்கள் & டாப் டெதர், மற்றும் திருட்டு எதிர்ப்பு அலாரத்துடன் இம்மொபைலைசர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று கனெக்ட்டிவ் வசதிகளுடன், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெப்லிங்க், புளூடூத் மற்றும் யுஎஸ்பி ஆகியவற்றை ஸ்மார்ட்போன் மூலம் இணைக்க முடியும். கூடுதலாக, விரிவான அனுபவமாக மாற்றும் வகையில், ASVM (உதவி பக்கக் காட்சி மானிட்டர்), ARVM (உதவி ரியர் வியூ மானிட்டர்), கடிகாரம், காலெண்டர், நேவிகேஷன், தனிப்பயனாக்கக்கூடிய படம் மற்றும் பொதுவாகப் பயன்படுத்தப்படும்.
எலிவேட் எஸ்யூவி காரின் பரிமாணங்கள் 4,312mm நீளம், 1790mm அகலம், 1,650mm உயரம் மற்றும் 2,650mm வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த மாடலில் 458 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் உள்ளது. எலிவேட் காரில் 220mm கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.
ஹோண்டா சிட்டி காரில் உள்ள என்ஜினை எலிவேட் எஸ்யூவி பகிர்ந்து கொள்ளுகின்றது. 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.
இந்த காரில் SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது.
Variants | Honda Elevate Manual | Honda Elevate CVT |
SV | Rs. 11 lakh | NA |
V | Rs. 12.11 lakh | Rs. 13.21 lakh |
VX | Rs. 13.50 lakh | Rs. 14.60 lakh |
ZX | Rs. 14.90 lakh | Rs. 16 lakh |
C-பிரிவில் மாடல்களில் இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளுடன் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.