
கியா இந்தியாவின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய தலைமுறை செல்டோஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு ஜனவரி 2 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளதால் முன்பதிவு கட்டணமாக 25,000 ரூபாய் செலுத்தி டிசம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் பதிவு செய்து கொள்ளலாம்.
New 2026 Kia Seltos
புதிய செல்டோஸ் காரின் தோற்ற அமைப்பு முந்தைய மாடலை விட மிகவும் கம்பீரமாகவும், நிமிர்ந்த தோற்றத்துடனும் காட்சியளிக்கிற நிலையில் முன்பகுதியில் செங்குத்தான வடிவமைப்புடன் கூடிய பிரம்மாண்டமான முகப்பு கிரில் மற்றும் சதுர வடிவிலான எல்இடி முகப்பு விளக்குகளுடன் எல்இடி முறையில் ஒளிரும் பகல் நேர விளக்குகள் காருக்கு ஒரு நவீன அடையாளத்தைத் தருகின்றன.
பக்கவாட்டில் மிக நேர்த்தியான புதிய டிசைனை பெற்ற 18-அங்குல அலாய் சக்கரங்கள், ஃபிளஷ் வகை கதவு கைப்படிகள், நேர்த்தியான சி-பில்லர் பகுதி மற்றும் பின்புறத்தில் மத்தியில் கியா லோகோ வழங்கப்பட்டு ஆங்கில எழுத்தான ‘L’ வடிவிலான எல்இடி விளக்குகள் இணைக்கப்பட்டுப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
புதிய செல்டோஸ் முந்தைய மாடலை விட வீல்பேஸ் 80 மிமீ அதிகரித்துள்ளதால், இன்டீரியரில் மிகவும் தாராளமான இடவசதி மற்றும் பூட்ஸ்பேஸ் வழங்கப்படலாம். 95 மிமீ நீளம், 30 மிமீ அகலம் ஆனால் உயரம் 10 மிமீ குறைவாக உள்ளது.
EV6 மாடலில் உள்ள இன்டீயரை தழுவியதாக அமைந்துள்ள நிலையில் செல்டோஸ் காரில், மிகப்பெரிய மாற்றமாக, இரண்டு 12.3 அங்குல திரைகள் (ஒன்று ஓட்டுநருக்கு, மற்றொன்று பொழுதுபோக்கிற்கு) இணைக்கப்பட்டு அகன்ற டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பிலான ஸ்டீயரிங் வீல், 360-டிகிரி கேமரா, காற்றோட்டமான வசதி கொண்ட இருக்கைகள், மற்றும் மேற்கூரை கண்ணாடி போன்ற பிரீமியம் வசதிகள் இதில் உள்ளன.
64-வண்ண சுற்றுப்புற விளக்குகள், 8-ஸ்பீக்கர் போஸ் ஒலி அமைப்பு, OTA அப்டேட், வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, மெமரி செயல்பாடு கொண்ட ஓட்டுநர் இருக்கை, பின்புற சன்-ஷேடுகள், டூயல் டோன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது.
பாதுகாப்பிற்காக, நவீன தொழில்நுட்பமான லெவல் 2 ADAS வசதி, 6 காற்றுப்பைகள், மற்றும் டயர் அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவி, ESC, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ISOFIX ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
செல்டோஸ் என்ஜின்
2026 கியா செல்டோஸ் காரின் என்ஜினில் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என மூன்றும் முந்தைய மாடலைப் போலவே அதே பவர்டிரெய்ன் விருப்பங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
| Engine | 1.5-litre NA petrol | 1.5-litre turbo-petrol | 1.5-litre diesel |
| Transmission | 6MT/CVT | 6 iMT/7 DCT | 6 MT/6 Auto |
| Power (PS) | 115 PS | 160 PS | 116 PS |
| Torque (Nm) | 144 Nm | 253 Nm | 250 Nm |
போட்டியாளர்கள்;-
ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா, விக்டோரிஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், டாடா சியரா மற்றும் கர்வ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மற்றும் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகன் போன்ற பிரபலமான கார்களுடன் ரெனால்ட்டின் வரவிருக்கும் டஸ்ட்டர் மற்றும் நிசான் டெக்டான் எஸ்யூவி ஆகியவை புதிய செல்டோஸுக்கு மிக வலுவான போட்டியாளர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.