டொயோட்டாவின் யாரீஸ் கிராஸ் காரின் TNGA-B பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள லெக்சஸ் LBX எஸ்யூவி மாடல் இந்த பிராண்டின் குறைந்த விலை காராக விளங்க உள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட LBX இந்தியாவிலும் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.
அதிகப்படியான விற்பனை எண்ணிக்கை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள 1.5 லிட்டர் ஹைபிரிட் என்ஜின் பெற்ற எல்பிஎக்ஸ் காரின் அறிமுகம் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கும்.
லெக்சஸ் வரலாற்றில் முதன்முறையாக சிறிய ரக மாடலை அறிமுகம் செய்துள்ளது. கிராஸ்ஓவர் LBX பரிமாணங்கள் 4,190 மிமீ நீளம், 1,825 மிமீ அகலம் மற்றும் 1,545 மிமீ உயரம், 2,580 மிமீ நீளமான வீல்பேஸ் கொண்டது.
இன்டிரியரில் டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் முடிந்தவரை எளிமைப்படுத்தப்பட்டு ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி வழங்கும் வகையில் 9.8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன் வசதியுடன் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே ஆகியவை பெற்றுள்ளது.
லெக்சஸ் எல்பிஎக்ஸ் காரில் புதிய 1.5-லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு அதிகபட்சமாக 134 bhp பவர் மற்றும் 185 Nm டார்க் வழங்குகின்றது. இதில் தானாக சார்ஜிங் ஆகின்ற பேட்டரியுடன் கூடிய ஹைப்ரிட் அமைப்பு உள்ளது.
இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹…
390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான…
இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில்…
எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று…
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட…
இந்தியாவின் முன்னணி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பிரபலமான ஸ்கூட்டர் வரிசைகளில் ஒன்றான ஆரம்ப நிலை S1X மாடலின் ரேஞ்ச்…