புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம்

64a74 mahindra thar suv

இந்தியாவின் 74-ஆவது சுந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் புதிய மஹிந்திரா தார் ஆஃப் ரோடர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகளுடன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவி டிசைன்

தனது பாரம்பரியமான தோற்ற பொலிவை தொடர்ந்து பராமரிக்கும் வகையில் வந்துள்ள புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலில் வட்ட வடிவமான ஹெட்லைட், 7 ஸ்லாட் கிரில், பம்பர் அமைப்பில் முரட்டுத் தனமை கொண்டு உயரமான வீல் ஆரச் போன்றவை கமீபரத்தை தொடர்ந்து தக்கவைக்க காரணமாக அமைந்துள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட், டெயில் கேட்டில் ஸ்பேர் வீல் கொடுக்கப்பட்டுள்ளது.

டாப் வேரியண்டில் 18 அங்குல அலாய் வீல், கன்வெர்டிபிள் அல்லது கடின மேற்கூறை என இரு ஆப்ஷன் உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள லேடர் சேஸி மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு கூடுதல் ஸ்டெபிளிட்டி திறனை வழங்கும். புதிய தார் எஸ்யூவி காரில் ரெட் ரேஜ், மிஸ்டிக் காப்பர், நெப்போலி பிளாக், அக்வாமரைன், கேலக்ஸி கிரே மற்றும் ராக்கி பீஜ் என 6 நிறங்கள் கிடைக்க உள்ளது.

இன்டிரியர் வசதிகள்

குறிப்பாக புதிய தார் எஸ்யூவியின் இன்டிரியர் முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்டு 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள், ரூஃபில் ஸ்பீக்கர்கள், ரிவர்ஸ் கேமரா, மல்டி இன்ஃபோ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஸ்டீயரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல், 50:50 இருக்கைகள் மற்றும் முழுமையாக வாட்டர் வாஷ் செய்யும் வகையிலான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் இரட்டை ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் குழந்தை இருக்கைகள், ஹில் ஸ்டார்ட் மற்றும் டெசண்ட் அசிஸ்ட், உருளுவதனை தடுக்கும் ஈஎஸ்பி மற்றும் நான்கு பயணிகளுக்கு மூன்று புள்ளி சீட்பெல்ட்டுகள் ஆகியவை அடங்கும்.

இரண்டு விதமான வேரிண்டுகள்

தார் AX (அட்வென்ச்சர்) மற்றும் தார் LX (லைஃப்ஸ்டைல்) என இருவிதமான முறையில் கிடைக்க உள்ளது.

குறைந்த விலை தார் AX வேரியண்டில் நிரந்தரமான சாஃப்ட் மேற்கூறை, 6 இருக்கைகள் (2 முன்புறம்+ 4 பக்கவாட்டு அமைப்பில்), 16 அங்குல வெள்ளை நிற ஸ்டீல் வீல், இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபெரன்சியல், பவர் ஸ்டீயரீங், பவர் விண்டோஸ், மற்றும் ரியர் பார்க்கிங் அசிஸ்ட் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரு தேர்விலும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இடம்பெற்றிருக்கும்.

தாரின் AX (O) வேரியண்டில் கன்வெர்டிபிள் டாப் அல்லது ஹார்ட் டாப், பின்புற இருக்கைகள் முன்புறம் நோக்கி இருப்பது போன்ற வடிவமைப்பு, ரிமோட் கீலெஸ் என்ட்ரி மற்றும் ஓட்டுநர் இருக்கை உயரம் அட்ஜெஸ்ட்மென்ட் உள்ளது.

டாப் வேரியண்டாக அமைந்துள்ள தாரின் LX மாடலில் ஏஎக்ஸ் வசதிகளுடன் கூடுதலாக கன்வெர்டிபிள் டாப் அல்லது ஹார்ட் டாப், 4 இருக்கைகள், டூயல் டோன் பம்பர், 18 அங்குல அலாய் வீல், எல்இடி ரன்னிங் விளக்கு, பனி விளக்கு, பிரீமியம் ஃபேபரிக் இருக்கைகள் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டயர்ட்ரானிக்ஸ், டயர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் HVAC, எலக்டரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. டீசல் என்ஜின் தேர்வில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் இடம்பெற்றிருக்கும். ஆனால் பெட்ரோல் தேர்வில் ஆட்டோமேட்டிக் மட்டும் அமைந்திருக்கும்.

மஹிந்திரா தார் எஸ்யூவி என்ஜின் சிறப்புகள் என்ன ?

முதன்முறையாக தார் எஸ்யூவி காரில் பெட்ரோல் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை பெட்ரோல் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. 2.0 லிட்டர் Mstallion பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 130 ஹெச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என இரு விதமான ஆப்ஷனை பெறுகின்றது.

மேலும் அனைத்து வேரியண்டிலும் மேனுவல் ஷிஃப்ட் 4×4 டிரான்ஸ்ஃபர் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் தார் எஸ்யூவி அறிமுகம் எப்போது ?

புத்தம் புதிய தார் எஸ்யூவி காரை மஹிந்திரா நிறுவனம் அக்டோபர் 2 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாடலுக்கு நேரடி போட்டியை ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.

Exit mobile version