Automobile Tamilan

XUV 3XO எஸ்யூவி விநியோகத்தை துவங்கிய மஹிந்திரா

mahindra xuv 3xo

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV 3XO விற்பனைக்கு வெளியிடப்பட்ட எஸ்யூவி முதல் ஒரு மணி நேரத்தில் 50,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்ற நிலையில் டெலிவரி இன்று முதல் துவங்கியுள்ளது.

வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு நிறங்களும் அதிகப்படியான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், AX5 மற்றும் AX5 L உள்ளிட்ட நடுத்தர வேரியண்டுகள் முதற்கட்டமாக டெலிவரி துவங்கப்பட்டுள்ளது. மேலும் டாப் வேரியண்டுகளுக்கு அதிகபட்சமாக  3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளது.

பிரசத்தி பெற்ற 4 மீட்டர் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள காம்பேக்ட் எஸ்யூவி  மாடலுக்கு நெக்ஸான் உட்பட பிரெஸ்ஸா, வெனியூ சொனெட் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் போட்டியாக உள்ள நிலையில் மிக உயரிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாக ரூ.7.49 லட்சம் முதல் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ துவங்குகின்றது.

3எக்ஸ்ஓ காரில்  MX1, MX2, MX2 PRO, MX3, MX3 PRO, AX5, AX5 L, AX7 மற்றும் AX7 L உள்ளிட்ட வேரியண்டுகளின் டாப் வேரியண்டில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டுள்ளது. டாப் வேரியண்டுகளில் Adrenox connect வசதிகள் மூலம் பல்வேறு கனெக்ட்டிவ் அம்சங்களை பெற்றுள்ளது.

2024 மஹிந்திரா XUV3XO எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ரூ. 9.01 லட்சம் முதல் ரூ.19.42 லட்சம் வரை உள்ளது.

மேலும் படிக்க –  நெக்ஸானுக்கு எதிராக XUV 3XO சிறப்புகள்

 

Exit mobile version