ஜனவரி 5ல் புதிய மஹிந்திரா XUV 7XO விற்பனைக்கு வெளியாகிறது.!

xuv 7xo teased

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட XUV700 மாடல் இனி XUV 7XO என்ற பெயரில் விற்பனைக்கு 2026 ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

தனது அறிவிப்பில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைச் சென்றடைந்து, இந்தியச் சாலைகளில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது XUV700. அந்த வெற்றியின் அடித்தளத்தில் நின்றுகொண்டு, இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடனும், வசதிகளுடனும் புதிய XUV 7XO உருவாக்கப்பட்டுள்ளது. இது பழைய மாடலின் நீட்சி மட்டுமல்ல, அதைவிடப் பல மடங்கு சிறப்பான ஒரு பரிணாம வளர்ச்சி என்று நிறுவனம் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் வந்த XEV 9s  போல இந்த காரிலும் மூன்று செட்டப் கொண்ட கிளஸ்ட்டருடன் மிக நேர்த்தியான அமைப்பினை வழங்குவதுடன் இருக்கை மற்றும் பல்வேறு வசதிகளுடன் பாதுகாப்பு சார்ந்தவற்றிலும் மேம்பாடு கொண்டிருக்கலாம். மற்றபடி, என்ஜினில் எந்த மாற்றும் இல்லாமல், 200hp பவர், 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 185hp பவர், 2.2-லிட்டர் டீசல் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கின்றது.

டிசைனில் தொடர்ந்து நவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் முன்பக்கம் புதிய கிரில், ஷார்ப்பான பம்பர் மற்றும் புதிய டிசைன் அலாய் வீல்கள் பெறக்கூடும்.

Exit mobile version