Automobile Tamilan

மஹிந்திரா XUV700 எஸ்யூவி அறிமுகமானது

இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 எஸ்யூவி பிரீமியம் வசதியுடன், புதிய மஹிந்திரா லோகோ பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாத மத்தியில் விலை அறிவிக்கப்பட உள்ளது.

மஹிந்திரா எஸ்யூவி வரிசையில் மிகவும் ஒரு ஸ்டைலிஷான மற்றும் தனது புதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது. மேலும், புதிதாக இந்நிறுவனத்தின் மாற்றியமைக்கப்பட்ட இலச்சினை பெற்றுள்ள முதல் மாடலாகவும் விளங்குகின்றது.

XUV700 என்ஜின் விபரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் உள்ள இன்ஜின் போட்டியாளர்களை விட சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக 200 ஹெச்பி பவரை வழங்குகின்ற எம் ஸ்டோலின் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, 2.0 லிட்டர் எம்ஹாக் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் 155 ஹெச்பி பவர், 350 என்எம் டார்க், இரண்டாவதாக 185hp மற்றும் 420Nm (450Nm ஆட்டோமேட்டிக்)  என இரு விதமான பவர் ஆப்ஷனை டீசல் என்ஜினில் பெற்று 6 வேக ஆட்டோ மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.

டீசல் இன்ஜின் பெற்ற மாடலுக்கு Zip, Zap, Zoom மற்றும் Custom என நான்கு விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு, ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட் வசதியும் உள்ளது.

எக்ஸ்யூவி 700 பாதுகாப்பு வசதிகள்

XUV700 காரில் மிக உயர் ரகமான பாதுகாப்பு தொழில்நுட்பமாக ADAS (Advanced Driver Assistance Systems) அமைந்துள்ளது. இந்த மாடலில் முன்புற மோதல் எச்சரிக்கையை (FCW-Forward Collision Warning) கொண்டுள்ள இதனை நீங்கள் இயக்க தவறினால் காரை நிறுத்த தன்னாட்சி அவசரகால பிரேக்குகளை (AEB-Autonomous Emergency Brakes) பயன்படுத்துகிறது. மற்ற அம்சங்களில் லேன் மாறுபாடு எச்சரிக்கை, லேன் கீப் அசிஸ்ட், அடாப்ட்டிவ் க்ரூஸ் கட்டுப்பாடு, ஸ்மார்ட் பைலட் அசிஸ்ட், டிராஃபிக் சைன் அங்கீகாரம் மற்றும் டிரைவர் மயக்கம் அல்லது சோம்பல் அடைவதை கண்டறிதல் ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, XUV700 ஏழு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், வேகத்திற்கான தனிப்பயனாக்கக்கூடிய குரல் எச்சரிக்கை மற்றும் முன் இருக்கைகளுக்கான ரிட்ராக்டர் ப்ரீ-டென்ஷனர்களுடன் சீட் பெல்ட்களுடன் வருகிறது.

எக்ஸ்யூவி 700 இன்டிரியர்

மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் இன்டிரியரில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டு நவீனத்துவமான அம்சத்தை கொண்டுள்ளது. இந்த மாடலில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்பென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்பென்ட் சிஸ்டத்தில் இந்நிறுவனத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட அமேசான் அலெக்சா அசிஸ்டன்ட் ஆதரவுடன் கூடிய AdrenoX UI பெற்றுள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு, வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோ பூஸ்டர் ஹெட்லைட்கள், டூயல் ஆட்டோ ஏசி, லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டாஷ்போர்டு செருகல்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட 12 ஸ்பீக்கர் அமைப்புடன் ஒலிபெருக்கி உட்பட 3டி சோனி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற அல்கசார்ஹெக்டர் பிளஸ்டாடா சஃபாரி போன்ற எஸ்யூவி கார்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் உள்ள இன்ஜின் போட்டியாளர்களை விட சிறப்பாக அமைந்துள்ளது.

Mahindra XUV700 Prices Petrol Diesel
Mahindra XUV700 MX ₹ 11.99 lakh ₹ 12.49 lakh
Mahindra XUV700 AX3 ₹ 13.99 lakh To Be Announced
Mahindra XUV700 AX5 ₹ 14.99 lakh To Be Announced
Mahindra XUV700 AX7 To Be Announced To Be Announced
Exit mobile version