புதிய மாருதி சுசூகி பலேனோ எதிர்பார்ப்புகள்..?

13d31 2022 maruti baleno teaser

வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள புதிய மாருதி பலெனோ கார் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது நெக்ஸா டீலர்ஷிப் மற்றும் ஆன்லைன் வழியாக முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

2022 மாருதி சுசூகி Baleno

புதிய பலேனோ சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வகைகளில் தொடர்ந்து வழங்கப்படும். சுசூக்கி பலேனோ காரில் தொடர்ந்து என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் 82 bhp பவரை வழங்கும் 1.2-லிட்டர் VVT என்ஜினில் 5 வேக மேனுவல், ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 1.2-லிட்டர் டூயல் ஜெட், டூயல் VVT ஸ்மார்ட் ஹைபிரிட் என்ஜின் 89 hp குதிரைத்திறன் வெளிப்படுத்துவதுடன் 113 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வரவுள்ளது.

1.2 லிட்டர் டூயல் ஜெட் என்ஜினில் முன்பாக சிவிடி கியர்பாக்ஸ் ஆனது வழங்கப்பட்டு வந்தது. இனி சிவிடி கியர்பாக்ஸ் க்கு மாற்றாக ஏஎம்டி கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே குறைந்த விலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 கார்களில் உள்ளதை போன்றே கொடுக்கப்பட்டுள்ள டேஸ்போர்டினை பெறுவதுடன் ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ சிஸ்டத்தை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே பெற்றிருக்கும். இந்த காரில் முதன்முறையாக ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே யூனிட் அல்லது HUD பெறும்.

வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பலேனோ காரில் மாருதி மிகுந்த கவனம் செலுத்தும். ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்போர் உட்பட பக்கவாட்டில் என அனைத்து பகுதியிலும் சேர்த்து மொத்தம் 6 ஏர் பேக்குகளை வழங்க உள்ளது இந்நிறுவனம் அடுத்தபடியாக எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மற்றும் உயர்தர ஸ்டீல் ஸ்டீல் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கார் என்பதனால் பாதுகாப்பு சற்று சிறப்பாகவே அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ், ஹோண்டா ஜாஸ், டொயோட்டா கிளான்சா மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ போன்றவற்றுடன் மாருதி சுஸுகி பலேனோ சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.

Exit mobile version