Automobile Tamilan

மாருதியின் பிரபலமான செடான் காரின் அறிமுக தேதி வெளியானது

maruti dzire 2024 launch soon

வரும் நவம்பர் 4ஆம் தேதி இந்தியாவின் முன்னணி செடான் மாடலாக விளங்குகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் 2024 டிசையர் விற்பனைக்கு வெளியாக உள்ளது. தற்பொழுது வெளியான நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அடிப்படையில் வரவுள்ள புதிய டிசையர் மாடல் ஆனது பல்வேறு நவீனத்துவமான டிசைன் மாற்றங்களை ஸ்விஃபடிலிருந்து மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 Maruti Dzire

புதிய மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜினை டிசையர் செடானும் பெற உள்ளது. இந்த எஞ்சின் பவர் 82 hp மற்றும் 112 Nm டார்க்கினை வெளிப்படுத்தும். இந்த மாடலில் தொடர்ந்து 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் என இரண்டு விதமாக வழங்கப்பட உள்ளது.

ஸ்விஃபட் காரை போலவே அடிப்படையான  6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், மூன்று புள்ளி இருக்கை பெல்ட்டுகள் உட்பட பாரத் கிராஷ் டெஸ்ட் நடைமுறைகளுக்கு உட்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்டிரியர் வசதிகளை பொறுத்தவரை டாப் டிசையர் வேரியண்டில் மிதக்கும் வகையிலான 9.0 அங்குல ஸ்மார்ட்புரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் சுசூகி கனெக்ட் , மேம்பட்ட ஏசி வசதி, மற்றும் டேஸ்போர்டின் நிறங்கள் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கலாம்.

ரூ.7 லட்சம் விலையில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாருதி சுசூகி டிசையர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் சந்தைக்கு வரவுள்ளது.

Please Follow Automobile Tamilan on Facebook – https://www.facebook.com/automobiletamilan

Exit mobile version