Site icon Automobile Tamil

2019 ஆம் ஆண்டின் சிறந்த கார் : மாருதி ஸ்விஃப்ட்

இந்திய சந்தையில் வெளியான கார்களில் 2019 ஆம் ஆண்டின் Indian Car Of The Year 2019 (ICOTY 2019) விருதினை புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது. நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றபடுகின்ற சிறந்த கார் தேர்வுமுறையை அடிப்படையாக கொண்ட இந்திய சந்தையின் அடிப்படையில் இந்த வருடத்திற்கான சிறந்த கார் தேர்வு செய்யபட்டுள்ளது.

இந்திய சந்தையில் வெளியான புதிய ஹூண்டாய் சான்ட்ரோ, ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிஆர்-வி, மஹிந்திரா மராஸ்ஸோ, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, புதிய எர்டிகா, டொயோட்டா யாரீஸ் போன்ற கார்களுக்கு இடையிலான போட்டியை எதிர்கொண்ட ஸ்விஃப்ட் கார் வென்றுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் கார் HEARTECT பிளாட்பாரத்தில் மிக சிறப்பான ஸ்டெபிளிட்டி கொண்டு விளங்குவதுடன், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாமல் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வினை பெற்றிருக்கின்றது. சுசுகி ஸ்விஃப்ட் காரில் 83 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிவற்றை பெற்றதாக வந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் 20,000 க்கு அதிகமான எண்ணிக்கையில் ஸ்விஃப்ட் கார் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக அமேஸ் மற்றும் சான்ட்ரோ விளங்கியது.

Exit mobile version