Automobile Tamilan

இந்தியா வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம்

new duster

ரெனால்ட் குழுமத்தின் டேசியா பிராண்டில் புதிய தலைமுறை டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தைக்கு விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய டஸ்ட்டர் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிற்கு மிக தாமதமாகவே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Renault Duster

CMF-B பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாம் தலைமுறை டேசியா டஸ்ட்டர் எஸ்யூவி மாடல் தொடர்ந்து ரெனால்ட், நிசான் பிராண்டில் டெரானோ எஸ்யூவி மாடலாக வரவுள்ளது. புதிய டஸ்ட்டர் சிறப்பான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற 4×2 மற்றும் 4×4 என இருவிதமான டிரைவ் ஆப்ஷனை பெற உள்ளது.

டஸ்ட்டர் எஸ்யூவி காரின் முன்பக்க தோற்றத்தில் புதுப்பிக்கப்பட்ட Y வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு, அகலமான பம்பர் கீழ் பனி விளக்கு அறை கொடுக்கப்பட்டு பக்கவாட்டில் 18 அங்குல அலாய் வீல் (குறைந்த விலை மாடல்களில் 17 அங்குல வீல்) உயரமான சதுர வடிவ வீல் ஆர்ச் கொண்டதாக அமைந்துள்ளது.

பின்பக்கத்தில் Y வடிவ எல்இடி விளக்கு கொடுக்கப்பட்டு பம்பர் ஆகியவை புதுபிக்கப்பட்டுள்ளது.

இன்டிரியரில் புதிய டஸ்ட்டர் எஸ்யூவி மாடலில் ஓட்டுநருக்கான டிஜிட்டல் கிளஸ்ட்டர் 7-இன்ச்  மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஆனது 10.1-இன்ச் தொடுதிரை பெற்றுள்ளது. சென்டர் ஏசி வென்ட்களுக்கு கீழே உள்ள கிடைமட்ட பேனலில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் எச்விஏசி சிஸ்டத்தைக் கட்டுப்படுத்தும் பல பட்டன்கள் உள்ளன.

மேலும் இந்த மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு, ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு மற்றும் ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆர்காமிஸ் 3டி ஆடியோ சிஸ்டம் பெற்றுள்ளது.

டஸ்ட்டர் உலகளவில் மூன்று என்ஜின் விருப்பங்களைக் கொண்டிருக்கின்றது. 120hp, 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல், 140hp, 1.2-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் 170hp, 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது ஃப்ளெக்ஸ்-எரிபொருளுக்கு இணக்கமாக உள்ளது.

Exit mobile version