Automobile Tamilan

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் அறிமுகமானது., இந்தியா வருமா.!

superb skoda

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற புதிய நான்காம் தலைமுறை சூப்பர்ப் செடான் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாற்றங்களை பெற்று கூடுதல் வசதிகள்  கொண்டுள்ளது.

அனேகமாக ICE என்ஜினை பெறுகின்ற கடைசி தலைமுறை சூப்பர்ப் செடானாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், இந்திய சந்தைக்கு மீண்டும் சூப்பர்ப் வருமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.

2023 Skoda Superb

செடான் மற்றும் எஸ்டேட் என இரு விதமான பாடி கட்டுமானத்தை கொண்டதாக வந்துள்ள புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் 150hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI, 204hp மற்றும் 265hp என இருவிதமான பவரை வழங்கும் 2.0-லிட்டர் TSI மற்றும் 150hp (2WD) மற்றும் 193hp (4WD) இருவிதமான பவரை வழங்கும் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பெறுகின்றது.

கூடுதலாக புதிய 1.5 லிட்டர் பிளக் இன் ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன் ஆனது அதிகபட்சமாக 204hp பவர் வழங்குவதுடன்  25.7kWh பேட்டரி பேக் சார்ஜ் செய்ய 25 நிமிடங்கள் போதுமான நிலையில் முழுமையான எலக்ட்ரிக் மூலம் 100 கிமீ ரேஞ்சு கிடைக்கும்.

முந்தைய காரை விட முற்றிலும் மாறுபட்ட புதிய டிசைன் வடிவமைப்பினை கொண்டுள்ள சூப்பர்ப் காரில் கொடுக்கப்பட்டுள்ள கோண வடிவிலான எல்இடி ஹெட்லைட் , புதிய பம்பர் , கிரில் அமைப்பு போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ளது.

19 அங்குல அலாய் வீல் பெறுகின்ற காரில் அதிக கேபின் இடத்தையும் பூட் இடத்தையும் வழங்குகிறது. இன்டிரியரில் ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் 10 இன்ச் விர்ச்சுவல் காக்பிட் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான 13-இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே உள்ளது.

பாதுகாப்பு அம்சங்களில் லெவல்-2 ADAS, பார்க்கிங் உதவி, 10 காற்றுப்பைகள், EBD உடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கட்டுப்பாட்டு, ISOFIX குழந்தை இருக்கை மவுண்டிங் பாயிண்ட்கள் மற்றும் அவசர உதவி திட்டம் ஆகியவற்றை பெறுகின்றது.

இந்திய சந்தைக்கு புதிய ஸ்கோடா சூப்பர்ப் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது இறுதியில் எதிர்பார்க்கலாம். ஆனால், ஸ்கோடா இந்தியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Exit mobile version