டொயோட்டாவின் புதிய கிளான்ஸா காரின் டீசர் வெளியானது

கிளான்ஸா கார்

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில், புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலாக டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza) கார் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. டொயோட்டா-சுசூகி இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் முதன்முதலாக இந்தியாவில் வெளியாக உள்ள காராக க்ளான்ஸா விளங்க உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக மாருதியின் கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்வதற்கும், டெயோட்டா நுட்பங்களை மாருதி பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.

டொயோட்டா கிளான்ஸா காரில் என்னென்ன வசதிகள்

பொதுவாக மாருதி பெலினோ காரின் பேட்ஜை மட்டும் நீக்கிவிட்டு டொயோட்டா நிறுவனத்தின் பாரம்பரியத்துக்கு ஏற்ற வகையில் முன்பக்க கிரில் , பம்பர் , தோற்ற அமைப்பு மாற்றப்பட்டு விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. அலாய் வீல் எந்த மாற்றங்களும் இல்லாமல் டொயோட்டா லோகோ மட்டும் பெற்றுள்ளது டீசர் மூலம் உறுதியாகியுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் சற்று கூடுதலான பிரீமியம் அம்சங்களை இணைத்திருக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் என்ஜின் ஆப்ஷனில் தொடர்ந்து பெலினோ காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டும் விற்பனைக்கு வரக்கூடும். 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகின்றது. 1.3 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளதால், டீசல் ஆப்ஷன் குறித்த எந்த உறுதியான தகவலும் இல்லை.

Toyota Glanza G மற்றும் Toyota Glanza V என இரு வேரியன்டுகளில் மட்டும் கிடைக்க உள்ள இந்த காரின் வாராண்டி காலம் மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை வழங்க உள்ளது. இதுதவிர வரும் காலத்தில் நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் இந்நிறுவனம் வழங்க வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version