Automobile Tamilan

738km ரேஞ்சு வால்வோ EM90 எலக்ட்ரிக் எம்பிவி அறிமுகம்

volvo em90 mpv

வால்வோ வெளியிட்டுள்ள புதிய EM90 எம்பிவி ரக மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 738km ரேஞ்சு வழங்குவதுடன் ஆடம்பர வசதிகளை கொண்ட மாடலாக விளங்குகின்றது.

அடுத்த சில மாதங்களில் சீன சந்தைக்கு விற்பனைக்கு செல்ல உள்ள இஎம்90 எம்பிவி இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

Volvo EM90

சீனாவின் ஜீலி நிறுவனத்தின் கீழ் செயல்படும் வால்வோ நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள இஎம்90 மாடல் ஏற்கனவே சீன சந்தையில் கிடைக்கின்ற Zeekr 009 எம்பிவி மாடலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

வால்வோ கார்களில் இடம்பெறுகின்ற தோர் சுத்தியல் போன்ற எல்இடி டிஆர்எல் உடன் கூடிய ஸ்பிலிட் எல்இடி ஹெட்லேம்ப் அமைப்புடன் ஒளிரும் வகையிலான வால்வோ லோகோவுடன் எல்இடி பதிக்கப்பட்ட மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டுள்ளது.

EM90 எம்பிவி பக்கவாட்டில் 19 அல்லது 20-இன்ச் அலாய் வீல் உடன் ஏரோ இன்செர்ட்டுகளுடன் உள்ளது. பின்புறம் ஒளிரும் வால்வோ பேட்ஜிங்குடன் செங்குத்தான எல்இடி டெயில் லேம்ப் கொண்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் ஆடம்பர வேனில் 6 இருக்கைகள் பெற்று 15.4 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 21-ஸ்பீக்கர் போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ்  இசை அமைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், மல்டி ஜோன் காலநிலை கட்டுப்பாடு, டூயல்-பேன் சன்ரூஃப், ஆம்பியன்ட் விளக்குகள், 360 டிகிரி பார்க் அசிஸ்ட் மற்றும் ரேடார் உதவியுடன் கூடிய ADAS தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

EM90 காரில் உள்ள 116kWh பேட்டரி 272hp பவரை வழங்குவதுடன் சீனாவின் CLTC சோதனை முறையின் மூலம் 738km ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், 30 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. EM90 எம்பிவி 0-100kph எட்டுவதற்கு 8.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

Exit mobile version