நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

nissan gravite mpv

இந்தியாவில் 2026 ஆம் ஆண்டில் டெக்டான் வெளியிடப்பட உள்ள நிலையில் அடுத்த மாடலாக நிசானின் புதிய எம்பிவி காரான கிராவைட் 7 இருக்கையுடன் அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. இன்று பெயர் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது ஏற்கனவே சந்தையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையாக இருந்தாலும், நிசானுக்கே உரிய தனித்துவமான அம்சங்களுடன் வரவுள்ளது.

Nissan Gravite

ட்ரைபர் மாடலில் உள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற உள்ள புதிய கிராவைட் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம் பெறக்கூடும்.

கிராவைட்டை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியச் சந்தையில் வெளியிடப்பட்டு மார்ச் 2026-ல் இதன் விலை  அறிவிக்கப்பட்டு ஷோரூம்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

CMF-A+’ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு தோற்றம் ட்ரைபரை விட மாறுபட்ட தோற்றத்துடன் முன்பக்கத்தில் நிசானின் பிரபலமான வி-மோஷன் கிரிலுடன் புதிய எல்இடி முகப்பு விளக்குகளுடன் பின்பக்கத்தில் உள்ள டெயில் லைட்களும் புதிய வடிவமைப்பைப் பெற்றிருக்கும்.

7 பேர் அமரக்கூடிய காம்பாக்ட் எம்பிவியில் இருக்கைகளை மடக்கும் பொழுது கூடுதலான பூட் வசதி இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் 8-அங்குல தொடுதிரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 6 ஏர்பேக், உறுதியான கட்டுமானத்துடன் ABS, EBD போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா போன்றவற்றுக்கு சவால் விடுக்க உள்ள கிராவைட் விலை ரூ.6 லட்சத்துக்கும் சற்று கூடுதலாக துவங்குவதுடன் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

Exit mobile version