ரெனால்ட்-நிசான் கூட்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில், நிசான் மேக்னைட் எஸ்யூவி உற்பத்தி இலக்கு வெற்றிகரமாக ஒரு லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் மேக்னைட் எஸ்யூவி காரை மட்டுமே விற்பனை செய்து வருகின்றது.
மேக்னைட் இந்தியா மட்டுமல்லாமல், பங்களாதேஷ், உகாண்டா, சீஷெல்ஸ் மற்றும் புருனே உட்பட 15க்கு மேற்பட்ட உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நிசான் மேக்னைட் சர்வதேச சந்தையிலும் கிடைக்கின்றது.
ஜப்பானில் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மேக்னைட் எஸ்யூவி காரில் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
சாதாரண 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
சமீபத்தில் பல்வேறு இசை சார்ந்த மேம்பாடுகளை பெற்ற கெஸா எடிசன் என்ற பெயரில் மேக்னைட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது.