Automobile Tamilan

எக்ஸ்-ட்ரெயில் டீசரை வெளியிட்ட நிசான் இந்தியா

nissan x-trail suv front view

இந்தியாவில் நிசான் நிறுவனம் மீண்டும் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி மாடலை வெளியிடுவனை உறுதி செய்யும் வகையில் டீசர் வெளியிடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வெளியிட உள்ளதால் விலை கூடுதலாக அமைய வாய்ப்பிருந்தாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2024 Nissan X-Trail

தற்பொழுது ஒற்றை எஸ்யூவி மேக்னைட் மாடலை மட்டும் உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்து வருகின்ற இந்நிறுவனம் கூடுதலாக பிரிமியம் சந்தைக்கு ஏற்ற மாடலாக வெளியிட உள்ள எக்ஸ்-ட்ரெயில் காரில் 204hp மற்றும் 305Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மூன்று சிலிண்டர் என்ஜின் மட்டும் பொருத்தப்பட்டிருக்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

சர்வதேச அளவில் 2WD மற்றும் AWD என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் இந்திய சந்தைக்கு எந்த மாடல் வெளியிடப்படும் என்று எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.

5 இருக்கை மற்றும் 7 இருக்கை என இரு விதமான ஆப்ஷனை பெற்றுள்ள இந்த மாடலில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களுடன் ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பான இடவசதியை கொண்டிருக்கும்.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஸ்கோடா கோடியாக் , ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுவதுடன் ஜீப் மெர்டியன் எஸ்யூவியை எதிர்கொள்ள உள்ள நிசானின் எக்ஸ்-ட்ரெயில் விலை ரூ.30 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version